உங்கள் குழந்தைகள் அதிகம் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்களா..? இதனால் வரும் பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

September 3, 2023

உங்கள் குழந்தைகள் அதிகம் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்களா..? இதனால் வரும் பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

 நாம் சாப்பிடும்போது இலையில் உப்பை கொஞ்சமாக, ஓரமாகதான் வைப்பார்கள். ஏனென்றால் உப்பை அதிகமாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால், இது தெரியாமல் சிறுவர்கள் உப்பு நிறைந்த நொறுக்கு தீணிகளையும், ஜங்க் ஃபூட்களையும் அதிகளவு சாப்பிடுகிறார்கள். உங்கள் குழந்தைகள் எவ்வுளவு உப்பை சாப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் ஏற்படக்கூடிய பதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் குழந்தை அதிகளவு உப்பு சாப்பிடுகிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவதைப் போல, எந்தவொரு உணவையும் உப்பில்லாமல் நாம் சாப்பிட முடியாது. நம் உணவிற்கு சுவையை கூட்டுவது இந்த உப்புதான். ஆனால் இதே உப்பை நீங்கள் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது, அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோகியத்திற்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. பெரியவர்களான நமக்கு எவ்வுளவு உப்பு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியும். ஆனால் குழந்தைகள் எவ்வுளவு உப்பு சாப்பிடுகிறார்கள் என நாம் கவனிக்கிறோமா? உங்கள் குழந்தைகள் அதிகளவு உப்பை எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அடிக்கடி தாகம் எடுக்கும் : சோடியம் நீரை தக்கவைக்கக் கூடியது. நம் உடலில் சோடியத்தின் அளவும் நீரும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய உடல் நன்றாக செயல்படும். நீங்கள் அதிகமாக உப்பை எடுத்துக் கொள்வதால், அதிகமாக தாகம் எடுக்கிறது. பெரும்பாலான சமயங்களில் இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படாது. ஏனென்றால், அவர்களுக்கு தாக்கம் எடுக்க பல காரணங்கள் இருக்கும். அதனால்தன் கீழே நாங்கள் கூறும் சில அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் : உங்கள் குழந்தை அடிக்கடி தாகம் எடுக்கிறது எனக் கூறுகிறார்களா? அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா? அப்படியென்றால் சிறுநீர் எந்த நிறத்தில் இருகிரது எனப் பாருங்கள். அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால், சிறுநீர் அதிக நாற்றத்தோடு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

கைகள் மற்றும் பாதங்களில் வீக்கம்  : உங்கள் குழந்தை அதிகமாக உப்பு சாப்பிட்டிருந்தால், அவர்களது உடல் சோடியத்தை தக்கவைக்க போராடும். இதன் காரணமாக செல்களின் வெளிப்புறத்தில், உடலில் திரவத்தின் அளவு கூடும். இதனால் கைகள் மற்றும் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் : உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ரத்த அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாகும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல இதய நோய் வரும் ஆபத்துள்ளது.

குழந்தைகள் எவ்வுளவு உப்பு சாப்பிட வேண்டும் : அவர்களின் வயதைப் பொருத்து குழந்தைகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு

  • 1 – 3 வயது குழந்தைகள் தினசரி 2 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது.
  • 4 – 6 வயது குழந்தைகள் தினசரி 3 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது.
  • 7 – 10 வயது குழந்தைகள் தினசரி 5 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது.
  • 11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தினசரி 6 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது.
  • ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் தினசரி ஒரு கிறாமுக்கும் குறைவான உப்பை சாபிட்டால் போதும்.
  • உங்கள் குழந்தை அதிகமான உப்பு நிறைந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்ய வேண்டும்?

    முதலில், அவர்களது சோடியம் உட்கொள்ளும் அளவை குறைத்து, டயட்டை மாற்றுங்கள். ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் மற்றும் பழங்களை கொடுங்கள். இவற்றை சாப்பிடுவதால் உடலில் இயற்கையாக சோடியம் அளவு சமனிலைப்படும். அதிக உப்பு நிறைந்த உணவை சாப்பிட்டால், நிறைய தண்ணீர் அருந்தச் சொல்லுங்கள். பொட்டாசியம் நம் உடலில் சோடியம் அளவை சீராக வைக்க உதவும். பொட்டாசியம் சத்து அதிகமுள்ள வாழைப்பழம், கீரைகள், தயிர், ப்ரோகோலி, கிவி பழம் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்தபடி சோம்பேறித்தனமாக இல்லாமல், உங்கள் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

  • Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment