“காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும்” இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது நம் காதுகளில் கேட்டிருக்கும். இந்த சூழலில் இரவு உணவு என்பது அத்தியாவசியமானது இல்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதாவது இரவு 7 மணிவரை எந்த நல்ல உணவை வேண்டுமானலும் உண்ணலாம் என்றும், அதன் பிறகு உணவை அறவே தவிர்ப்பது உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவை தரும் என்று தெரிவிக்கின்றனர். இதை பலரும் முயற்சி செய்து, பின் அது நல்ல பலன் தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நாம் இன்று இரவு உணவைத் தவிர்த்தால் என்னென்ன நல்லது நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
செரிமான சக்தி வலுப்பெறும் : நம் உடலில் உள்ள செரிமான உறுப்புகள் மாலை நேரத்திற்கு பிறகு சரியான முறையில் வேலை செய்யாது. அதற்கும் சிறிது ஓய்வு தேவை அல்லவா. இதனால் 7 மணிக்கு மேல் உணவை வயிற்றில் கொட்டி செரிமான உறுப்புகளை டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் விளைவாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நிம்மதியான தூக்கம், காலையில் எழும்போது சோர்வின்மை போன்ற பல நன்மைகள் இதில் அடங்கும்.
உடல் எடையைக் குறைக்கலாம் : இரவு நேரத்தில் உணவைத் தவிர்த்தால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என பல நிபுணர்கள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். உடலில் தேவையில்லாத கொழுப்பு தங்குவதையும் இந்த முறை தவிர்ப்பதாக கூறியுள்ளனர். உடலில் உள்ள நல்ல கலோரிகளை சேமித்து வைக்க இரவு உணவை நாம் தவிர்ப்பது நல்லதாகும்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரவு உணவைத் தவிர்க்கலாம். இரவு அதிகமான பசி இருந்தால் சூப் போன்ற சக்தி நிறைந்த திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் 8 அல்லது 9 மணிக்குள் எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் இருக்கும் தேவையற்ற சர்க்கரை பொருள்கள் சரியான செரிமானம் இல்லாமல் உடலின் ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய்க்கான ஆபத்தை வலுப்படுத்தும். எனவே, இரவு உணவை தவிர்ப்பது நல்லது.
உண்ணாவிரத பயன்கள் : இரவு ஒரு நேரம் நாம் உணவை தவிர்ப்பதால், உடல் பாகங்கள் அத்தனையும் வலுப்பெறுகிறது. தேவையில்லாமல் பசியைத் தூண்டும் பழக்கத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்கிறது. இரவு உணவை எப்படி தவிர்ப்பது நல்லதோ, அதேவேளை காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பது மிகவும் நல்லதாகும். செரிமானத் திறன் உடலில் அதிகம் கிடைக்கும் நேரம் காலை என்பதால், அத்தியாவசியமான சத்துள்ள உணவுகளை காலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள்.
Click here for more Health Tip
0 Comments:
Post a Comment