நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி தனது மும்பை அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 240 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 94 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 30 இடங்களும் , 53 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 22 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த 45 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன்னனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முக்கியமான தேதிகள் : ஆன்லைன் எழுத்துத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 70 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 30 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் எடுத்துக் கொண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி : இதற்கான விண்ணப்பங்களை பாரத ஸ்டேட் வங்கியின் https://bank.sbi/web/careers/current-openings OR https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்
அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment