இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள 450 (Recruitment for the Post of Assistant - 2023) உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவி
இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தகுதி: 01‐09‐2023 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
Sr. No. | வகை | கட்டணம் | தொகை * |
1. | பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் | அறிவிப்புக் கட்டணம் | ரூ.50/- |
2. | பொதுப் பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS) | விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம் | ரூ.600/- |
3. | ஆர்பிஐ பணியாளர்கள் | விலக்கு | விலக்கு |
விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 04, 2023.
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment