Search

அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொள்வதால் நேரடியாக பாதிக்கப்படும் இதய ஆரோக்கியம்... எப்படி தெரியுமா..?

 

நாம் தினசரி உண்ணும் உணவுகளில் கட்டாயம் சேர்க்கப்படும் இரண்டு வெள்ளை நிற பொருட்கள் உப்பு மற்றும் சர்க்கரை. பார்ப்பதற்கு வெண்மையாக மற்றும் பாதிப்பில்லாததாக இருக்கும் உப்பு மாற்று சர்க்கரை இரண்டுமே சாப்பிடும் பொருட்களை சுவை மிகுந்ததாக மாற்றுகின்றன.

எனவே 3 வேளையும் செய்யும் சமையல் முதல் ஸ்னாக்ஸாக சாப்பிடும் பதார்த்தங்கள் வரை நம்முடைய தினசரி கிச்சன் பயன்பாட்டில் இவை இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான பொருட்களுக்கு உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் மிகவும் அடிப்படையானவையாக, அவசியமானவையாக இருக்கின்றன. ஆனால் உணவுகளின் வழியே இவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்து கொள்வது அமைதியாக ஒரு சுகாதார நெருக்கடியை தூண்டுகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. குறிப்பாக உப்பு, சர்க்கரை இரண்டின் அளவுக்கு அதிகமான நுகர்வு நேரடியாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு நுகர்வால் நமது இதயத்திற்கு ஏற்பட கூடிய ஆபத்துகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

சர்க்கரை:

பல நூற்றாண்டுகளாக நம் நாட்டு கலாச்சாரம், மரபுகள் மற்றும் மத சடங்குகளில் சர்க்கரை முக்கியமான சுவையூட்டியாக இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் நம் நாட்டின் சர்க்கரை நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆய்வு ஒன்றின்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 35 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து நிலையான அதிகரிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு சர்க்கரை நுகர்வின் அளவு இந்தியாவில் 29 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களிடம் காணப்பட்ட வாழ்க்கைமுறை முற்றிலும் மாறி வாழ்க்கைமுறை மாற்றங்கள் சார்ந்த நோய்களின் அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த அதிகரித்த சர்க்கரை நுகர்வு மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரும் தங்களது சர்க்கரை நுகர்வு அளவை கண்காணிப்பது மேலும் அவசியமாகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு அடித்தளமாக அதிகரித்த சர்க்கரை பயன்பாடு காரணமாக இருக்கிறது.

சர்க்கரைக்கும் இதய ஆரோக்கியத்திற்குமான தொடர்பு...

பிரபல இதயநோய் நிபுணர் ஆயுஷி அகர்வால் பேசுகையில், அதிக சர்க்கரை நுகர்வு நம் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். நாம் அதிக சர்க்கரையை எடுக்கும்போது அதை சரியாக ப்ராசஸ் செய்து முடிக்க நம் உடல் போராடும். இதுவே தொடர்கதையாக இருந்தால் காலப்போக்கில் இன்சுலின் ரெசிடென்ஸ் ஏற்பட வழிவகுக்கும். இன்சுலின் ரெசிடென்ஸ் என்பது ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான இன்சுலினுக்கு நமது செல்கள் குறைவாக ரெஸ்பான்ஸ் செய்யும் நிலையாகும்.

Insulin resistance காரணமாக உடல் பருமன் மற்றும் அடிவயிற்றை சுற்றி கொழுப்பு குவிவது (Abdominal fat) உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். அடிவயிற்றில் குவியும் கொழுப்பானது தொப்பையை ஏற்படுத்தி உங்கள் அழகை கெடுப்பது மட்டுமல்ல, இதய நோய்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைய கூடும்.

எப்படி என்றால் Abdominal fat-ஆனது நம் ரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுகிறது. தவிர ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல்ஸ் மற்றும் ரத்த உறைவு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் பல ஹார்மோன்களின் பேலன்ஸை பாதிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. இதய பாதிப்புகளை தவிர அதிகப்படியான சர்க்கரை நுகர்வு fatty liver சிக்கலையும் ஏற்படுத்த கூடும்.

உப்பு:

நம் நாட்டில் 1 நபர் தினசரி 11 கிராம் உப்பை சேர்த்து கொள்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிபுணர்களின் பரிந்துரை என்பது நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது. பரிந்துரைக்கப்பட்டதை விட தினசரி இரட்டிப்பாக சேர்த்து கொள்ளப்படும் இந்த அதிகப்படியான உப்பு நுகர்வு முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது.

உப்பு மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு இருக்கும் தொடர்பு...

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் எளிதாக ஒருவருக்கு இதய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் சைலன்ட் கில்லர் என குறிப்பிடப்படுகிறது. ஒருவர் அதிகமாக உப்பு எடுத்து கொள்ளும் போது அவரது உடலில் இருக்கும் கூடுதல் திரவம் (fluid) வெளியேற்றப்படாமல் தக்க வைக்கப்படுகிறது. ரத்தத்தில் கூடுதல் நீர் இருப்பது ரத்த அளவை அதிகரிப்பதோடு மற்றும் arteries-களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து arteries-களில் ஏற்படும் இந்த அழுத்தம் அவற்றை சேதப்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் plaque வரின் சுவர்களில் எளிதாக டெபாசிட்டாகிறது. இறுதியில் இது atherosclerosis ஏற்படுவதற்கு வழிவகுக்கும். atherosclerosis என்பது தமனிகள் (arteries) குறுகி, கடினமாகி நம் இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறைந்து போக கூடிய ஒருநிலையாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க டிப்ஸ்:

சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் இனிப்புகளை குறைக்க முயற்சித்து பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை டயட்டில் சேர்க்கவும்.
பெரும்பாலும் சர்க்கரை சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற வெவ்வேறு பெயர்களால் உணவு லேபிள்களில் அச்சிடப்பட்டிருக்கும் என்பதால் பேக்கிங் உணவுகளை வாங்கும் முன் லேபிள்களை சரிபாருங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சமையலின் போதும், சாப்பிடும் போதும் உப்பைக் குறைவாக பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்க தினசரி ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுங்கள். இதன் மூலம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் மற்றும் அடிவயிற்றில் கொழுப்பு குவியும் அபாயத்தை குறைக்கலாம்.

சீரான இடைவெளியில் உங்களின் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்ளுங்கள்.


0 Comments:

Post a Comment