பெருங்குடல் புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்களில் பொதுவாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ? நமது பெருங்குடலில் தங்கும் உணவுகள் கழிவுகள் தான் அது. வாயை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வோம். பெருங்குடலை எப்படி சுத்தம் செய்வது என்று யோசிக்கலாம். அதே போல அது ஆரோக்கியமானதா என்றும் சிந்திக்கலாம். அதற்கான பதில்களை சொல்கிறோம்.
நாம் வாய் வழியாக சாப்பிடும் உணவு தொண்டையைத் தாண்டியதுமே செரிமான வேலை என்பது தொடங்கிவிடும். அதன் முக்கியப் பணி பெருங்குடலில் நடக்கும். நாம் உட்கொள்ளும் தண்ணீரை உறிஞ்சுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் இறுதி கட்ட பொறுப்பு பெருங்குடலுடையது. உங்கள் பெருங்குடலை நன்கு கவனித்துக்கொள்வது முக்கியம்.
ஆனால் எப்படி?
பெருங்குடல் சிகிச்சை, ஹைட்ரோ பெருங்குடல் சிகிச்சை, பெருங்குடல் நீர் அல்லது பெருங்குடல் நச்சுத்தன்மை நீக்குதல் என்றும் அழைக்கப்படும் பெருங்குடல் சுத்திகரிப்பு பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த வகையான சிகிச்சைகள் பெரும்பாலும் நல்ல பெருங்குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு செயலாக்கமான அணுகுமுறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில் இதில் மருத்துவப் பயன்கள் உள்ளதா?
பெருங்குடல் சுத்திகரிப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து பழக்கத்தில் இருப்பது தான். முதலில் உணவு பொருட்கள் வழியாக செய்யப்பட்டு வந்தது இப்போது கொஞ்சம் ரசாயனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செய்யப்படுகிறது. தவறான மறுத்து அல்லது விஷம் குடித்தவர்களுக்கு எனிமா கொடுத்து வெளியே எடுப்பது ஒரு வகை.
இன்னொரு முறை: மலக்குடலுக்குள் ஒரு குழாயைச் செருகி அதிக அளவு நீர் குழாய் வழியாக தள்ளுவர். அது பெருங்குடலில் உள்ளதை அள்ளி வெளியே இறைத்துவிடும். இதுவும் பெருங்குடலை முழுமையாக சுத்தப்படுத்த உதவும். இதை மருத்துவத்தில் சிறந்தவர்கள் தான் செய்வர்.
இதனால் நன்மைகள் என்ன?
உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், எடை இழப்புக்கு உதவுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தரும் என்கின்றனர்.
ஆனால் இந்த கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா?
இந்த சிகிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் தரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் சிலருக்கு நன்மைகள் நடந்துள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. உண்மையில், மருத்துவம் அல்லாத அமைப்பில் இந்த சிகிச்சைகளைச் செய்யும்போது உண்மையில் ஆபத்து உள்ளது.
பெருங்குடல் சுத்திகரிப்பு அபாயங்கள் என்ன?
- நீங்கள் பெருங்குடல் சுத்தப்படுத்த முயற்சிக்கும் முன் பல அபாயங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- நீரிழப்பு: பெருங்குடலில் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்கும்போது, பெருங்குடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படும். அதனால் நீரிழப்பு ஏற்படும்.
- அதே போல அசுத்தமான கருவிகள் உள்ளே சென்றால் அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால் குடல் புண் அல்லது குடல் தொற்றுகள் ஏற்படலாம்.
பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில நிரூபிக்கப்பட்ட வழிகள் :
ஆல்கஹால் மற்றும் சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். புகையிலையைத் தவிர்க்கவும், வாரத்திற்கு குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்யவும், 45 வயதில் தொடங்கும் கொலோனோஸ்கோபிகளுக்கு உங்கள் மருத்துவரை தவறாமல் பார்க்கவும்.
பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீங்கள் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடலாம். பல ஆய்வுகள் நார்ச்சத்து நிறைந்த உணவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.என்று கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment