Search

மன வலிமை அதிகம் உள்ள பெண்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்களாம்.. நீங்க எப்படி..?

 ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. சில பெண்கள் மிகவும் தைரியமாக இருப்பார்கள், சிலர் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார். சிலர், மனதில் இருப்பதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், பெண்களுக்கு மன வலிமை மிகவும் இன்றியமையாதது. Mentally Strong என்று கூறப்படும் பெண்கள் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். அதே போல, மன வலிமை அதிகமுள்ள பெண்களுக்கென்று பிரத்யேகமான குணங்கள், பண்புகள் உள்ளன. மனவலிமை அதிகமுள்ள பெண்கள் இதை எல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்.

தன்னைத் தானே நொந்து கொள்வது, தன் மீது கழிவிரக்கம் கொள்வது : 

அச்சோ இப்படி நடந்து போச்சு, உங்களைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது, சாரி என்று மற்றவரிடம் கூறுவது வேறு, தன்னை தானே நொந்து கொண்டு தனக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது என்பது வேறு. மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்கள் எப்பொழுதுமே தன் மீது பரிதாபப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். எதிர்பார்த்த ஒரு விஷயம் தவறாகப் போனால் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என்றால் கூட அதனால் அது பெரிய அளவில் பாதிக்காது. சரி இப்படி நடந்துவிட்டது, பரவாயில்லை என்று அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.

வாழ்க்கையில் தொடர்ந்து பல பிரச்சனை சந்தித்தாலும், என்றாவது ஒருநாள் நேரம் ஒதுக்கி நன்றாக அழுது விட்டு, அழுத சுவடே தெரியாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உற்சாகப்படுத்திக்கொண்டு விடுவார்கள். மன உறுதியும், மன வலிமையும் அதிகம் இருப்பது என்பது குறை சொல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதாக அர்த்தம் ஆகாது. வாழ்க்கை இவ்வளவு சவாலாக இருந்தாலுமே அதை எதிர்கொள்வதற்கான வலிமையை தானே உருவாக்கிக் கொள்வதை குறிக்கிறது

எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது :

‘நான் நீண்ட நாட்களாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன்; அதற்கான கதாபாத்திரங்கள், கதை ஓட்டம், தொடக்கம் முடிவு என்று எல்லாமே ஓரளவுக்கு என் மனதில் இருக்கிறது. ஆனால் நான் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை டைப் செய்ய முயற்சிக்கும் போது அது கச்சிதமாக வரவில்லை. மனதில் இருக்கும் கதாபாத்திரம் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. கதை நான் நினைக்கும் போக்கில் செல்லவில்லை!’ இது ஒரு உதாரணம். இவ்வாறு எல்லாவற்றையுமே பெர்பெக்ட் ஆக ஒரே ஒரு சிறிய பிழை கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களை தாங்களே மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்கிறார்கள்.

மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்கள் எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே எதிர்பார்க்க மாட்டார்கள். முதலில் ஒரு வேலையைத் தொடங்கலாம் அது கச்சிதமாக இல்லை என்றால் அதை அடுத்து மேம்படுத்திக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வார்கள். எதார்த்தமாக என்ன செய்ய முடியும், எது சாத்தியம் என்பதை புரிந்து கொண்டு நடப்பது எளிதாக இருக்கும்.

தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது : 

மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்களுக்கான போட்டியாளர் அவர் மட்டும் தான். அவர் வேறு யாரையுமே ஒரு தன்னுடைய போட்டியாளராக நினைக்கவே மாட்டார்! தனிப்பட்ட விஷயங்களிலும் சரி, குடும்பத்திலும் சரி, தொழில்முறை ரீதியாகவும் அவர் நேற்று எப்படி இருந்தார், இன்று எப்படி இருக்கிறார், நாளை எப்படி இருப்பார் அவருடைய அடுத்த இலக்கு என்ன என்று தன்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து நிலைக்கு செல்ல வேண்டும் என்று தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வார்; மற்றவர்களுடன் எப்பொழுதுமே சேரவே மாட்டார்.

இன்னொரு பெண்ணின், உங்கள் தோழி அல்லது உங்களுக்கு தெரிந்தவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை சமூக வலைதளங்கள் வழியாக நீங்கள் மிகச் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்! ஒருவர் என்ன வாங்குகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதல் எந்த ஊருக்கு சுற்றுலாவுக்கு செல்கிறார் என்பது வரை எல்லாமே சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அதை பார்த்து,

  • என்னால் ஏன் அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை?
  • நான் இவ்வளவு அழகாக இல்லை?
  • என்னுடைய வேலை ஏன் இப்படி இருக்கிறது?
  • என்னிடம் என்ன தவறு?
  • என்னால் ஏன் நிறைய பயணம் செய்ய முடியவில்லை?

இது போன்ற மேற்கூறிய கேள்விகளுடன் மிக எளிதாக ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய போட்டித் தன்மை நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்த சில பெண்கள் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஒரு சிலர் இதற்கு எதிர்மாறாக மிகப்பெரிய தொழிலதிபராக அல்லது வெற்றிகரமான வணிகம் செய்து வருபவராக இருக்கலாம். வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முன்னுரிமை இருக்கிறது. எனவே, உங்களுடைய வளர்ச்சி, உங்களுக்கு என்ன தேவை, என்பதை மட்டுமே நீங்கள் ஒப்பிட்டு பார்த்து உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தன்னைத் தானே தாழ்வாக நினைப்பது :

எவ்வளவு மோசமான சூழலிலும், மன வலிமை நிறைந்த பெண் தன்னை தாழ்வாக நினைக்க மாட்டார். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலும், அதைக் கடந்து வரும் வலிமை பெண்களுக்கு இருக்கிறது. உங்கள் இன்னர் வாய்ஸ் என்று கூறப்படும் மனதில் குரலில் எதிர்மறையான சிந்தனையை நிறுத்த நீங்கள் பயறிசி செய்யலாம்.

  • உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்
  • உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம்
  • நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதை கண்ணாடியின் முன்பு கூறிப் பார்க்கலாம்
  • மற்றவர்களை மட்டம் தட்ட மாட்டார்கள்
  • மன வலிமை அதிகம் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் மற்றவர்களை குறிப்பாக பிற பெண்களை மட்டம் தட்டியோ இழிவாகவோ பேச மாட்டார்கள். ஒருவரை தாழ்த்திப் பேசினால் தன்னை உயர்த்திக் காட்டி கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள், பொறாமைப் பட மாட்டார்கள்.

    எப்போதும் மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி நடக்க மாட்டார்கள் : 

    எல்லோருக்கும் எப்போதுமே அனைவரையும் பிடித்துவிடாது அல்லது பிடிக்கும் சூழல் இருக்காது. உறுதியான பெண்கள், எல்லா சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு பிடித்தவாறு செய்து, தன்னை பொருட்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். People Pleasing என்பதைத் தவிர்த்து விடுவார்கள்.


0 Comments:

Post a Comment