Search

சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

 பருவகாலம் வந்துவிட்டாலே நோய்த்தொற்றுகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளும் நோய்களை உண்டாக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி, கடுமையான நோய்களாக இருந்தாலும் சரி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், ஆன்ட்டிபயாடிக்குகள் எடுப்போம்.

ஆனால் அடிக்கடி  நமக்கு ஆன்ட்டிபயாடிக்குகள் எடுப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வழிகளை சொல்கிறோம். உங்கள் சமையலறையில் உள்ள 6 இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உங்களை இந்த பருவக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பூண்டு: பல நூற்றாண்டுகளாக, பூண்டு அதன் சமையல் பண்பிற்காக மட்டுமல்ல, அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள அல்லிசின்   ஒரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பி கலவையாகும். இது உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடுகிறது.

இஞ்சி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் இஞ்சி முக்கியமானது. இஞ்சியில் செரிமானத்திற்கு உதவும் மற்றும் நோய்த்தொற்று கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இஞ்சியை சமையலில் சேர்ப்பதோடு சான்றாகவும்,  டீயில் போட்டும் குடிக்கலாம்.

பப்பாளி: ருசியான வெப்பமண்டலப் பழமான இது உங்கள் சுவை மொட்டுகளுக்கு ஒரு விருந்து மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரம். வைட்டமின் சி நிறைந்த பப்பாளி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற நொதிகள் உங்கள் செரிமான கூட்டாளிகள், ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

பூசணி விதைகள்: பூசணி விதைகளின் அளவை வைத்து அதன் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன மற்றும் ஒட்டுண்ணிகளை உண்மையில் முடக்கக்கூடிய ஒரு அமினோ அமிலத்தைக் கொண்டிருக்கின்றன. வறுத்த பூசணி விதைகளை சிற்றுண்டி அல்லது சாலடுகள் மற்றும் தயிர் ஓடு சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்:  தேங்காய் இயற்கையின் உண்மையான பரிசு. தேங்காயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக செயல்பட்டு , குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக இயற்கையான தடையாக செயல்படுகிறது. சமையலுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும், நீரேற்றத்திற்காக தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய்ப்பால் குடிக்கலாம்.

மஞ்சள்: கோல்டன் ஹீலிங் மசாலா என்று அழைக்கப்படும் மஞ்சள் புண்களை ஆற்றும் பண்புகளுக்காக மஅறியப்படுகிறது. மஞ்சளில் உள்ள செயலில் உள்ள சேர்மமான குர்குமின், ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. குழம்புகள், கறிகள், சூப்கள், மஞ்சள் தண்ணீர்,  மஞ்சள் பால் போன்ற வகைகளில் மஞ்சளை எடுத்துக்கொள்ளலாம்.


0 Comments:

Post a Comment