Success Tips : முறைகள் மற்றும் நம்பிக்கைகளை அடையாளம் காண்பது முதல் வெற்றிக்கான பாதையை நோக்கி நாம் செல்ல நமக்கு தேவையான விழிப்புணர்வைப்பெற்று, அதனை பழக்கவழக்கமாக்கி வாழ்வில் முன்னேறும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
அடிக்கடி வாழ்க்கையில் நாம், நின்று நிதானித்து, சில விஷயங்களை கவனித்து, வாழ்க்கையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நல்ல ஒரு ஊக்குவிப்பும், திட்டமிடலும் இருந்தால், படிப்படியாக நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதற்கு சாத்தியம் உள்ளது. இஸ்ரா நாசர் என்ற தெரபிஸ்ட் கூறுகையில்,
உங்களைப்பற்றிய விழிப்புணர்வையும், செயலையும் இணைத்து செயல்படுத்தினாலே உங்களுக்கு வெற்றிகிட்டும். இது உங்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தி தரும். பொருமையாகவும், உங்களிடம் கருணையுடனும் நீங்கள் நடந்துகொள்ளும்போது, உங்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியையும் கொண்டாடுவீர்கள்.
நம்மிடம் உள்ள பழக்கவழக்கங்களை உற்று நோக்கினாலே போதும். அவை நம்மிடம் புரையோடிக்கிடக்கும், நம்பிக்கையை கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த நம்பிக்கைகள் நமது கடந்த கால அனுபவங்களில் இருந்து ஏற்பட்டவை. அவை நம்மை தடுப்பவையாகவும் இருக்கும். இந்த தடைபடுத்தும் இந்த சவால்களை நாம் தகர்த்துவிட்டால், இவை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நமக்கான திட்டங்கள், நோக்கங்கள் அவற்றை அடைவதற்காக நாம் வைத்துள்ள குறிக்கோள்களை நாம் ஒவ்வொன்றாக மீண்டும், மீண்டும் வரிசைப்படுத்தி நினைவுபடுத்திக்கொண்டால், அது நமது செயல்களை அதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க உதவும். அதன் குறிக்கோள் என்னவென்று தெரிந்துகொள்ளவும் உதவும்.
தொடர்ந்து சிறிய மாற்றங்களைச் செய்வது, நமது நோக்கங்கள் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் நோக்கம் கொண்ட இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேற உதவும்.
தொடர்ந்து சிறிய மாற்றங்களைச் செய்வது, நமது நோக்கங்கள் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் நோக்கம் கொண்ட இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேற உதவும். எனவே தொடர்ந்து முன்னேறிச்செல்வதற்கு தேவையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்.
வளர்ச்சி நமது ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறி, பின்னடைவுகள் மற்றும் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. தோல்விகளை டீமோடிவேஷனாகப் பார்க்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment