நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரை நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்த வேலை தேடுபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைதேடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job (www. tnprivatejobs.tn.gov.in)" என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடுபவர்களும், வேலையளிப்போர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment