நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. அப்படி சில நல்ல உணவுகள் குறித்து காண்போம்.
உடலை நாள் முழுவதும் சூடாகவிடாமல் வைத்து இருப்பது மிக முக்கியம். அப்படி வைக்காமல் சிலர் விடுவதால், இதயப் பிரச்னை, கல்லீரல் பிரச்னை, அஜீரணக்கோளாறு ஆகியவை ஏற்படும். அத்தகைய உணவுகள் குறித்து காண்போம்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகளவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், செரிமானம் நன்கு நடைபெறுகிறது. இதயத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறது.
இளநீர்: சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இதயப் பிரச்னையைக் கட்டுப்படுத்தவும் இளநீர் பயன்படுகிறது. நீர்ச்சத்தினை அதிகரிக்கவும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கவும், உடலின் வெப்பநிலையைக் குறைக்கவும் இளநீர் பயன்படுகிறது.
பப்பாளி: பப்பாளியில் நார்ச்சத்து இருக்கிறது. விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் நிறையவுள்ளன. கொழுப்பினைக் குறைக்கப்பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
அன்னாச்சிப் பழம்: கேன்சரைத் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குளிர்ச்சியைத் தருகிறது.
மாங்காய்: இதயத்திற்கு நல்லது. பற்களை வலுவாக்கும் தன்மை கொண்டது. உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது. குளிர்ச்சியைத் தருவதில் வல்லவை.
அதேபோல், பச்சைக்காய்கறிகள், தக்காளி, தர்பூசணி , வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக தேனை எடுத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment