ஒவ்வொரு மனிதருக்கும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆனது சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஹீமோகுளோபின் அளவுக்கதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கடத்தி செல்லும் முக்கியமான பணியை ஹீமோகுளோபின் செய்கிறது. ஹீமோகுளோபின் குறைபாடு குறிப்பாக பெண்களுக்காக அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் காலங்களில் போது ஏற்படும் இரத்தப்போக்கு இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான கல்லீரல், பச்சை காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் இவை உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது.
குறிப்பாக வைட்டமின் சி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக் கொள்ளும். எனவே உடலின் இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு முதலில் நாம் வைட்டமின் சி நமது ரத்தத்தில் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் உண்ணும் உணவில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெளிரிய தோள், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். ஒரு வேலை உங்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
ஃபாலிக் எனப்படும் வைட்டமின் பி9 ஆனது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த சிவப்பு அணுக்கள் சரியாக இருந்தால் தான் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும். இதற்கு பச்சை காய்கறிகளையும், பருப்பு வகைகளையும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் பி12 இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது எனவே இறைச்சியையும் பால் பொருட்களையும் நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சமையலின் போது கனமான அடி பகுதியை கொண்ட இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதும் உணவில் உள்ள இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க உதவும்.
மேலும் சில சமயங்களில் எந்த வகை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை விட என்னென்ன விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக உடலின் இரும்புச்சத்து கிரகிப்பு தன்மையை குறைக்கும் தன்மை கொண்ட உணவுகளை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது உதாரணத்திற்கு டீ, காபி மற்றும் கால்சியம் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
0 Comments:
Post a Comment