தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மின்-மாவட்ட மேலாளர் (E- District Managaer) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்சேர்க்கை விவரங்கள் :
நிறுவனம் / துறை | தமிழ்நாடு மின் ஆளுமை முகமை |
பதவி | மின்-மாவட்ட மேலாளர் |
இணையதளம் மூலம் விண்ணப்பம் தொடங்கும் நாள் | ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி |
இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் | செப்டம்பர் 11ம் தேதி |
வயது தகுதி | 01- 06-2023 அன்றைய தேதியில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
காலியிடங்கள் | நாமக்கல் - 1நாகப்பட்டினம் - 1பெரம்பலூர் - 1திருச்சி - 1திருப்பூர் - 1வேலூர் - 1விழுப்புரம் - 1காஞ்சிபுரம் - 1 |
கல்வித் தகுதி | கணினி அறிவியல்/கணினிஅறிவியல் மற்றும் பொறியியல்/தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பி.இ, பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(அல்லது)ஏதாவது இளநிலை பட்டத்துடன் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
கணினி வழி மூலம் தேர்வு நடைபெறும் நாள் | 24.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | ரூ. 250/- ஆகும் |
tnega என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: ஆள்சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பாடங்களைத் தவிர வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.
விண்ணப்பதாரர் கண்டிப்பாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பதாரர்கள் https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ என்ற இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி என்னிலும் தொடர்பு கொள்ளலாம் 044-40016235 . மின்னஞ்சல் தொடர்புக்கு edm2023@onlineregistrationform.org ஆகும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment