வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..! - Agri Info

Adding Green to your Life

September 7, 2023

வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..!

 ஒரு நாளைக்கு மூன்று வேளை அல்லது நான்கு வேளை என எத்தனை வேளை உணவு சாப்பிட்டாலும் காலை வேளையில் நாம் சாப்பிடக்கூடிய உணவுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்குவது அவசியம். நாம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு படுக்க சென்றவுடன், நமது உடலில் பல்வேறு விதமான சீரமைப்பு செயல்பாடுகள் நடைபெறும். காலை நாம் எழும்போது கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரத்திற்கு நமது வயிறு காலியாக இருக்கும். காலியான இந்த வயிற்றுக்கு நம் கொடுக்கக் கூடிய உணவுகள் நேரடியாக நமது உடலால் உறிஞ்சப்படும். 

எனவே காலையில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். அந்த வகையில் நாம் காலையில் என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது எப்பொழுதும் பலர் மனதில் இருந்து கொண்டே இருக்கும் ஒரு கேள்வி. இது குறித்த சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.


எலுமிச்சை தண்ணீரில் தேன்: காலை நேரத்தில் தண்ணீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகுவதை தற்போது பலர் ஒரு பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது கொழுப்பை எரிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. தேனில் சர்க்கரையை காட்டிலும் அதிக கலோரிகள் உள்ளது. மேலும் தேன் அதிக கிளைசிமிக் எண் கொண்டது. சுத்தமான தேனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பலர் சர்க்கரை தண்ணீரை தேன் என்ற பெயரில் சாப்பிட்டு வருகின்றனர். இது நமது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரித்து நாள் முழுவதும் அதிகப்படியான உணவு சாப்பிட வழிவகுக்கும்.

சுத்தமான மற்றும் எந்த ஒரு பிரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்படாத தேன் மிகவும் ஆரோக்கியமான இயற்கை இனிப்பானாக கருதப்படுகிறது. இது ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டின் மூலமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து களஞ்சியமாகவும் கருதப்படுகிறது. எனினும் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

டீ மற்றும் காபி: வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பது நமது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலங்களை தூண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாகலாம். டீ, காபி மற்றும் காஃபைன் நிறைந்த பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை. பொதுவாக காலையில் நாம் எழுந்திருக்கும் பொழுதே மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் அளவு அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் காஃபைன் கலந்த பானங்களை பருகினால் மன அழுத்தம் இன்னும் அதிகமாகும். காலை எழுந்ததும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு விட்டு, 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து காபி, டீ குடிக்கலாம்.

பழங்கள்: பிற உணவுகளை காட்டிலும் பழங்கள் விரைவாக செரிமானம் அடைந்து விடும் . இதனால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே நமக்கு மீண்டும் பசி எடுக்க ஆரம்பிக்கும். அது மட்டும் அல்லாமல் சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

இனிப்பான காலை உணவு: இனிப்பு கலந்த காலை உணவை சாப்பிடுவது நமது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கலாம். இனிப்பான காலை உணவை சாப்பிட்டால் விரைவாக பசி எடுக்க தொடங்கி விடும். இதனால் உங்கள் ஆற்றல் அளவு குறையலாம். எனவே காலை நேரத்தில் புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

நட்ஸ், அவகாடோ, நெய், விதைகள் போன்ற நல்ல கொழுப்பு அடங்கிய உணவுகளுடன் நாளை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இதனைத் தொடர்ந்து புரோட்டின் நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும். இது உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிப்பது மட்டுமல்லாமல் நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவும்.

நீரிழிவு நோய் இல்லாதவர்கள், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை இல்லாதவர்கள் கட்டாயமாக தங்களது காலை உணவில் தேன் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடலாம். உங்கள் உடலின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு உணவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment