நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் உலகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு பகுதிகளில் என்ன வகையான உணவு பரிமாறப்படுகிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளோம். பிரெஞ்சு மக்கள் இரவு உணவிற்கு என்ன சாப்பிடுகிறார்கள்? இலங்கையர்களும் நம்மைப் போலவே சோறு சாப்பிடுகிறார்களா? இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காலை உணவு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால், இந்தக் கட்டுரை உங்களுக்காக மட்டுமே!
ஜப்பான்: கிழக்கு ஆசியாவில் உள்ள இந்த தீவு நாட்டில் நாம் இதுவரை பார்த்திராத காலை உணவு உண்டு! ஒரு பொதுவான ஜப்பானிய காலை உணவில் ஸ்டிக்கி அரிசி, வறுக்கப்பட்ட மீன், மிசோ சூப், நாட்டோ மற்றும் தமகோயாகி ஆகியவை உள்ளன. Tamagoyaki என்பது ஒரு ஜப்பானிய உருட்டப்பட்ட முட்டை மற்றும் நாட்டோ கொண்ட உணவாகும்.
பிரான்ஸ்: இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு இனிப்பு காலை உணவு கொண்டது , க்ரோசண்ட்ஸ் பிரான்ஸில் உள்ள முக்கிய காலை உணவு! பெரும்பாலும் ஸ்ட்ராங் காபியுடன், பிரெஞ்சு மக்கள் எளிமையான மற்றும் விரைவான காலை உணவை உட்கொள்வதை விரும்புகிறார்கள். காபியுடன் ஒரு சாக்லேட் குரோசண்ட் உண்பதை அதிகம் விரும்புகின்றனர்.
பிரான்ஸ்: இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு இனிப்பு காலை உணவு கொண்டது , க்ரோசண்ட்ஸ் பிரான்ஸில் உள்ள முக்கிய காலை உணவு! பெரும்பாலும் ஸ்ட்ராங் காபியுடன், பிரெஞ்சு மக்கள் எளிமையான மற்றும் விரைவான காலை உணவை உட்கொள்வதை விரும்புகிறார்கள். காபியுடன் ஒரு சாக்லேட் குரோசண்ட் உண்பதை அதிகம் விரும்புகின்றனர்.
இத்தாலி: உண்மையான இத்தாலிய காலை உணவில் காபியின் பங்கு பெரிது . அதோடு கார்னெட்டி போன்ற இனிப்பு பேஸ்ட்ரி இரு உணவு டிவிஸ்டாக இருக்கிறது. கார்னெட்டி உண்மையில் ஒரு இத்தாலிய குரோசண்ட்!
துருக்கி: மத்திய தரைக்கடல், ஒட்டோமான், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய உணவு வகைகளின் தாக்கத்துடன், துருக்கிய உணவு மிகவும் பிரமாண்டமான விஷயமாக மாறுகிறது. பாரம்பரிய துருக்கிய காலை உணவு கூட ஒரு விருந்தாக கருதப்படுகிறது! காலை உணவில் பல்வேறு வகையான சீஸ், மரைனேட் செய்யப்பட்ட ஆலிவ்கள், ஜாம்,, துருக்கிய ரொட்டிகள் (சிமிட்), முட்டை மற்றும் துருக்கிய சுக்குக், பாஸ்துர்மாஆகியவை அடங்கும். காலை உணவிள் இங்கு தேநீர் முக்கிய இடம் பிடிக்கின்றன
கொரிய கலாச்சாரம் இந்த நாட்களில் K-Pop மற்றும் K-Dramas காரணமாக பிரபலம் அடைந்து வருகிறது. இது கொரிய உணவு வகைகளைப் பற்றிய ஆர்வத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது! கொரிய உணவுகளை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும், கொரிய கலாச்சாரத்தில் வழக்கமான காலை உணவுகள் கிம்ச்சி , கொரிய முட்டை, கிம்ச்சி முட்டை, கொரிய முட்டை ரோல்ஸ் மற்றும் அபலோன் கஞ்சி போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது.
No comments:
Post a Comment