எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் தெரியுமா? - Agri Info

Adding Green to your Life

September 28, 2023

எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் தெரியுமா?

 மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், வடிவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் உடல் உறுப்பு தானம் பற்றியும் , எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் என்பது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார் .

உடல் உறுப்பு தானம் :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்திருந்தவர் வடிவேலு. இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த வடிவேலு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள காந்தி காலனி பகுதியில் அவரது வீட்டில் வடிவேலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது . வடிவேலின் உடலுக்கு மதுரை மண்டல அப்பல்லோ மருத்துவமனையில் முதன்மைச் செயலாளர் நீலகண்னன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

வடிவேலின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு கிட்னி , தோல் , ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எடுக்கப்பட்ட உறுப்புகள், வேறு ஒருவருக்கு உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் எந்தெந்த உறுப்புகள் தானம் செய்வதற்கு தகுதியான உறுப்புகள் என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார் .

இதுகுறித்து நீலகண்னன் கூறுகையில், " வடிவேலின் உயிரிழப்புக்கு மருத்துவமனை சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தோம். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த வடிவேலின் குடும்பத்தாருக்கு மருத்துவமனை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் . இதுபோன்ற அறிவிப்புகளால் உடல் உறுப்பு தானம் இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.

உடல் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் பல மனிதர்களுக்கு வாழ்வு கிடைக்கும் எனவும் , கண்கள் நுரையீரல் கல்லீரல் கிட்னி தோல் போன்ற உறுப்புகள் உடலில் இருந்து எடுத்து மற்றொரு நபருக்கு பொருத்தலாம் எனவும் , ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கிறது.அந்த இடைவெளிக்கு உள்ளாகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறினார்.

Click here for more Health Tip

No comments:

Post a Comment