கார்டியோவாஸ்குலர் நோய்கள் எனப்படும் CVDs உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும். ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதற்குப் பலியாகி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன. சைலன்ட் கில்லர் எனப்படும் மாரடைப்பு, முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு திடீரென ஏற்பட்டு ஒருவரைத் தீவிரமான நிலைக்குத் தள்ளுகிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகிறோம். ஆனால் உண்மையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா.! எனவே ஹார்ட் அட்டாக் ஏற்படுவதைத் தவிர்க்க முன்பே வெளிப்படும். அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். ஹார்ட் அட்டாக் நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட அறிகுறிகள் தொடர்பான ஆய்வு ஒன்று பாதிக்கப்பட்ட சுமார் 50 பெண்களிடையே நடத்தப்பட்டது.
பெண்களுக்கான மாரடைப்பு: பாலினங்களுக்கு இடையில் ஹார்ட் அட்டாக் பாகுபாடு காட்டாது என்றாலும் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்க கூடும். ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பி பிழைத்த பெண்களைக் கொண்டு ஹார்வர்ட் ஹெல்த் சர்வே ஒன்றை மேற்கொண்டது. ஆய்வை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை மாரடைப்பு திடீரென்று நிகழும் என்ற கட்டுக்கதையைப் பொய்யாக்குகிறது.
புறக்கணிக்கக் கூடாத பொதுவான அறிகுறிகள்: சர்வேயில் பங்கேற்ற சுமார் 95% பெண்கள் தங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே சில சகஜமற்ற உணர்வுகளை அனுபவித்ததாகக் கூறி இருக்கிறார்கள். இதன்படி ஹார்ட் அட்டாக் ஏற்படும் என்பது உணர்த்திய 2 பொதுவான அறிகுறிகளாக இதுவரை அனுபவிக்காத அளவு சோர்வு மற்றும் தூக்கமின்மை இருந்திருக்கிறது. இவை தவிர மூச்சுத் திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை ஹார்ட் அட்டாக்கின்போது ஏற்படும் சில முக்கிய அறிகுறிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வின் மூலம் தெரிய வருவது என்ன : இதுவரை இல்லாத அதீத சோர்வு, தூக்கம் என்பது பிரச்சனை இல்லாமல் இருந்து திடீரென தூங்குவதில் சிக்கல் மற்றும் தொந்தரவு ஏற்படுவது அல்லது மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் துவங்கிய உடனே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் உரியப் பரிசோதனைகளை மேற்கொள்வது ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்கப் பெண்களுக்கு உதவும்.
ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு கால் செய்து விட்டு, அது வரும் வரையிலான நேரத்திற்குள் ஆஸ்பிரின் மாத்திரையைப் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கலாம். ஆஸ்பிரின் எதற்கு என்றால் இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு ஹார்ட் அட்டாக்கின் தீவிரத்தைப் பொறுத்து இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் அளவை பொறுத்து அதனைக் கரைக்க மருந்துகளை பயன்படுவதுவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ நிபுணர்கள் முடிவெடுப்பார்கள்.
ஆரோக்கியமான மற்றும் சீரான டயட், தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செல்வது அல்லது ஒர்கவுட்செய்வது, உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழுவது, புகை & மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கும்.
No comments:
Post a Comment