வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்... இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..! - Agri Info

Adding Green to your Life

September 10, 2023

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்... இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..!

 அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் இயற்கை இனிப்பானான வெல்லம் பல்வேறு விதமான நிறங்களிலும், சுவைகளிலும் கிடைக்கிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த உணவுப் பொருட்களான தேநீர், இனிப்பு வகைகள், ரொட்டி, சாதம் மற்றும் பல்வேறு உணவுகளை தயாரிப்பதற்கும் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியத்தின் இருப்பிடமாக கருதப்படும் வெல்லம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வெல்லத்தில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற மினரல்களும் காணப்படுகிறது.

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது குளிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு வழியாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை பரிந்துரை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வெல்லம் ஏராளமான நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் வெல்லம் உதவுகிறது. இந்த பதிவில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து பருகுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து பார்க்கலாம்.

வெல்லம் தண்ணீர் தயாரிப்பது எப்படி? ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதனை சூடாக்கவும். அதில் ஒரு இன்ச் அளவு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி ஆற வைக்கவும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்திற்கு வந்தவுடன் அதனை பருகலாம். வெல்லம் தண்ணீரின் பயன்க

எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருவதற்கு உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிக அளவில் காணப்படுவதால் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீர் உடலின் இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிப்பதற்கு உதவுகிறது.

இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்கிறது: உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தினமும் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீர் பருகுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்த இந்த பானம் ரத்தத்தின் RBC எண்ணிக்கையை சரியான முறையில் பராமரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்கள் தாராளமாக வெல்லம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை பருகலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது: உடலை சுத்தப்படுத்தக் கூடிய பண்பு வெல்லத்திற்கு உண்டு. இது இயற்கையாகவே இரத்தம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது. வெல்லம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை வழக்கமான முறையில் சரியான அளவில் பருகி வரும்பொழுது உங்கள் சருமம் பொலிவாகி, ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். அதோடு உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து நிறைந்த நச்சுக்களும் வெளியேற்றப்படும்.

எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது: வெல்லத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் எடை இழப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு மூன்று நாள் இந்த பானத்தை பருகலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மெக்னீசியம், வைட்டமின் B1, B6 மற்றும் C போன்ற ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் வெல்லத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் மினரல்களும் காணப்படுகிறது. எனவே அதிகாலையில் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீரை பருகுவது கட்டாயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

No comments:

Post a Comment