பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன வேலை:
தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சர் பணிக்கு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்ற தகுதி அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு கணக்கிடப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல் மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் முகவரி:
அருள்மிகு பழனியாண்டவர் சுலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழனி - 624601 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
வரும் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5 மணியே கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பங்களை அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு apcac.edu.inஅல்லது apcac.eduஎன்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment