Book Reading Tips| ஒரு புத்தகத்தை விரைவில் வாசிக்க தேவையான டாப் 10 டிப்ஸ்கள் இதோ! - Agri Info

Adding Green to your Life

September 8, 2023

Book Reading Tips| ஒரு புத்தகத்தை விரைவில் வாசிக்க தேவையான டாப் 10 டிப்ஸ்கள் இதோ!

 

ஒரு புத்தகத்தைப் படிக்க ஒரு "அறிவியல் முறை" இல்லை என்றாலும், உங்கள் புரிதலையும், பொருளைத் தக்கவைத்துக்கொள்ளவும் பல்வேறு உத்திகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு புத்தகத்தை உள்வாங்குதல் மற்றும் படிப்பது என்பது உளவியல், நரம்பியல் மற்றும் கல்வி தொடர்பான பல அறிவியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான அறிவாற்றல் செயல்முறையாகும். 

அமைதியான சூழல்

புத்தகம் படிக்க குறைந்த கவனச்சிதறல்கள் கொண்ட அமைதியான, நன்கு வெளிச்சம் உள்ள சூழலைத் தேர்வு செய்யவும். ஒரு இனிமையான வாசிப்புச் சூழலானது வாசிப்பின் செறிவு மற்றும் புரிதலை கணிசமாக மேம்படுத்தும்

தெளிவான இலக்குகளை அமைக்கவும்

புத்தகத்தைப் படிப்பதற்கான உங்கள் நோக்கத்தைத் தீர்மானிக்கவும். நீங்கள் படிப்பது பொழுதுபோக்குக்காகவா அல்லது அறிவை பெறுவதற்காக அல்லது கல்வி நோக்கங்களுக்காகவா என்பதை தீர்மானத்து அதற்கு ஏற்றார் போல் தெளிவான இலக்குகளைக் கொண்டிருப்பது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

புத்தகத்தின் முன்னோட்டம்

புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணை, அறிமுகம் மற்றும் அத்தியாயத் தலைப்புகளை முதலில் படிப்பதன் மூலம் புத்தகத்தின் அமைப்பு மற்றும் புத்தகத்தின் மேலோட்டமான புரிதலை முதலில் அளிக்கிறது.

குறிப்பு எடுத்தல்

புத்தகத்தின் முக்கியமான பத்திகளை அடிக்கோடிடுவடு வாசித்தல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். புத்தகத்தில் முக்கிய குறிப்புகள் பற்றிய தகவல்களை பக்கத்தின் விளிம்புகளில் குறிப்புகளை எழுதவும். இந்த செயல்முறை முக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கவும் நினைவில் கொள்ளவும் உதவுகிறது.

ஆழ்ந்த வாசிப்புப் பயிற்சி

வனமும் மெதுவாக உள்வாங்கி படிப்பதும் ஆழ்ந்த வாசிப்புக்கு அவசியமாக சொல்லப்படுகிறது. சிக்கலான அல்லது அறிமுகமில்லாத விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது வேக வாசிப்பு நுட்பங்களைத் தவிர்க்கவும். நரம்பியல் ஆராய்ச்சி, ஆழமான வாசிப்பு, புரிதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய பல்வேறு மூளைப் பகுதிகளை ஈடுபடுத்துகிறது.

இடைவெளி விட்டு படித்தல்

தகவல்களை உள்வாங்கித் தக்கவைத்துக்கொள்ளும் மூளையின் திறன் காலப்போக்கில் குறைகிறது. வாசிப்பின் போது வழக்கமான இடைவெளிகளை எடுப்பது உங்கள் அறிவாற்றல் வளங்களைப் புதுப்பிக்க உதவுகிறது. 25 நிமிட கவனம் செலுத்திய வேலை அமர்வுகள் மற்றும் 5 நிமிட இடைவெளிகளை உள்ளடக்கிய Pomodoro டெக்னிக் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படித்ததை வைத்து சிந்தித்தல்

புத்தகத்தின் ஒரு பகுதி அல்லது அத்தியாயத்தை முடித்த பிறகு, நீங்கள் படித்ததைப் பற்றி சிந்திக்க இடைநிறுத்தவும். முக்கிய குறிப்புகளை உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கவும். இந்த பிரதிபலிப்பு நடைமுறை புரிதல் மற்றும் நீண்ட கால தக்கவைப்பை மேம்படுத்துகிறது.

கலந்துரையாடல்

புத்தகத்தில் நீங்கள் படித்தது குறித்த விவாதங்களில் ஈடுபடுவது அல்லது நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, பொருள் பற்றிய உங்கள் புரிதலை வலுப்படுத்தும். கருத்துகளை வேறொருவருக்கு விளக்கும் செயல்முறை வெவ்வேறு அறிவாற்றல் செயல்முறைகளை செயல்படுத்துகிறது.

செல்போனிடம் இருந்து விலகி இருங்கள்

வாசிப்பின் போது கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் கருவிகளில் இருந்து விலகி இருப்பது மிக முக்கியம். உங்கள் கவனத்தை சிதறடிக்ககூடியதாக நீங்கள் நினைக்கும் செல்போன், டிவி, லேப்டாப் மற்றும் இதரவற்றில் இருந்து முடிந்தவரை விலகி இருக்க உறுதி எடுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment