காலை உணவின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் என்ன உணவை சாப்பிடுகிறோமோ அதுதான் நாம். நம் உடல் நலனை காப்பதும் அதுவே. குறிப்பாக நாம் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நம் பரபரப்பான வாழ்க்கையில் நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கிறோம். காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லது கிடையாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதை நாம் செய்யவே கூடாது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
மூளையின் இயக்கத்துக்கு சத்தான காலை உணவு உதவுகிறது. அது உணர்வுகள், மனநிலை, எதிர்பார்ப்புகள், நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் மற்றும் அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
உங்களை பலமிக்கவராக வைக்கிறது
மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிக முக்கியமானது. ஒரு நாள் முழுவதும் ஒருவர் இயங்குவதற்கு தேவையான வலுவைக்கொடுக்க காலை உணவே உதவுகிறது.
பசியின்றி நீண்ட நேரம் இருக்க உதவுகிறது
காலையில் நீங்கள் புரதம் மற்றும் நார்ச்த்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்களை நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. காலையிலேயே நீங்கள் முட்டை, ஓட்ஸ், சீஸ் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் பசியின்றி இருக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் காலை வேலைகளை செய்ய முடிகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நிலையாக வைத்திருக்க உதவுகிறது
உயர் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து, சர்க்கரையாக மாற்றும் செயல்திறனை குறைக்கிறது. உணவில் உள்ள மெக்னீசியம் உடலில் சரியான அளவு குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
இதயத்தை காக்கிறது
நீங்கள் காலை உணவை உட்கொள்ளவில்லையென்றால், கலோரி அதிகமுள்ள சிற்றுண்டி, கொழுப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது உங்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது
நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந் உணவுகள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. தேவையற்ற சிற்றுண்டிகள் உட்கொள்வதை தடுக்கிறது. அது உங்கள் உடல் உடை பராமரிப்பில் உதவுகிறது.
ஊட்ச்சத்து உட்கொள்வதை அதிகரிக்கிறது
ஆய்வுகளின்படி, முட்டை, பழங்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகிய ஊட்டச்சத்து நிறைந் உணவு வகைகளை உட்கொள்வது, உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க உதவுகிறது
சீஸ், தயிர் போன்றவற்றை உட்கொள்ளும்போது அது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
0 Comments:
Post a Comment