Rice: வயிற்று எரிச்சலைக் குறைக்கும் பழையசோறு… இத்தனை நன்மைகளா? - Agri Info

Adding Green to your Life

September 12, 2023

Rice: வயிற்று எரிச்சலைக் குறைக்கும் பழையசோறு… இத்தனை நன்மைகளா?

 

நாம் அனைவரும் அறிந்த பழையசோற்றின் நன்மைகளை இங்கு காண்போம்.

தற்போது ஒரு கலாசாரம் நம் இளைஞர்கள் மத்தியில் திரும்பி வருகிறது. பாரம்பரியம் திரும்புதல் என்பதுவே அது. பலர் பாரம்பரிய உணவுகளை கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர். அது ஒரு வகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும் கூட. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், நிறைய இடங்களில் களி, புட்டு, பழையசோறுக்கென பிரத்யேக கடைகளைக் கூட, சிலர் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அத்தகைய சிறப்புமிக்க உணவுகளில் மிக முக்கியமானது, பழையசோறு. 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரிசி கஞ்சியிடன் கப்பைக்கிழங்கை உணவு தொட்டு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. அதுபோல், நம் தமிழ்நாட்டில் உழைக்கும் சாமானிய மக்களின் அமிர்தமாகத் திகழ்ந்த பழையசோறு, இன்று பலருக்கும் ஃபேவரைட்டாக மாறி இருப்பது உள்ளபடியே வரவேற்புக்குரியது.

பழைய சாதம் தயார் செய்வது எப்படி?: பாத்திரத்தில் வடித்த நன்கு வெந்த சாதத்தில், இரவில் நீர் மற்றும் தேவைப்பட்டால் மோர், உப்பு சேர்த்து வைத்துவிட்டால், காலையில் பழைய சாதம் தயார். அப்படி என்ன நடக்கிறது, இந்த பழைய சாதத்தில் என்றால், உடலுக்கு நன்மைதரும் பாக்டீரியாக்களின் மூலம் நல்ல எனர்ஜியான உணவாக பழைய சாதம் மாறிவிடுகிறது.

பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் என்ன?: இந்த பழைய சாதத்தில் கிடைக்கும் இரும்புச்சத்து, வடித்த சாதத்தில் இருக்கும் இரும்புச்சத்தினைவிட 25 விழுக்காடு அதிகம். புரதச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் பெருமளவு பழைய சாதத்தில் உள்ளன. வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

பழைய சாதத்தின் கால இடைவெளி: பழைய சாதத்தை நீருற்றிய 12 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட்டால், உடலுக்கு இந்த சத்துக்கள் கிடைத்துவிடும். அதிக நேரம் கழித்துச் சாப்பிட்டால் ஒவ்வாமைகூட ஏற்படலாம்.

பழைய சாதமும் பயன்களும்:

  • பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப்பொருமல் ஆகியவற்றுக்கு, பழைய சாதம் அருமருந்து.
  • செரிமானத்துக்கு நார்ச்சத்து அவசியம். பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் உடலில் செரிமானம் ஆகும்.
  • பழைய சாதத்தில் இருந்து கிடைக்கும் நீர் தலைக்கு தேய்த்து குளிக்கும்போது இயற்கை கண்டிசனராகப் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் முடியின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.
  • பழைய சோற்றில் கிடைக்கும் செலீனியம், மக்னீசியம் நம் உடல் எலும்புகளை வலுப்படுத்தும்.
  • பழையசோற்றில் இருந்து கிடைக்கும், நீர் ஆகாரம் உடல் சூட்டைக்குறைத்து வயிற்று எரிச்சலைக் குறைக்கும். 
  • பழைய சாதத்தில் வைட்டமின் பி இருப்பதால், வயிற்றில் உண்டாகும் அல்சர் என்னும் புண்களை ஆற்றுப்படுத்தும்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்



No comments:

Post a Comment