Search

SBI வங்கியில் வேலைக்கு சேர சூப்பர் வாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்.. விவரங்கள் இதோ!

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலை அனைத்து மையப்படுத்தப்பட்ட வங்கி வேலைகளிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது.

தற்போது, எஸ்பிஐ வங்கியானது 2,000 PO பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செப்டம்பர் 27 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதவிகளுக்கான இறுதித் தேர்வு, இரண்டாம் கட்டம் (முதன்மைத் தேர்வு) மற்றும் மூன்றாம் கட்டம் (நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சி) சுற்றுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840 என்ற அளவில் ரூ.41,960 சம்பளத்தில் புரொபேஷனரி அதிகாரி அல்லது மேனேஜ்மெண்ட் டிரெய்னி ஆக சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் என்ன?

எஸ்பிஐ பிஓ பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும், டிசம்பர் 31, 2023க்குள் பட்டப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்தால், தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

எஸ்பிஐ-யில் பிஓ ஆக விண்ணப்பிப்பவர்கள் ஏப்ரல் 1, 2023 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் விவரம்

SBI PO Recruitment 2023 Notification

SBI PO Recruitment 2023 link to apply

SBI PO க்கு செலுத்த வேண்டிய விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவு/EWS/OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக் கட்டணமும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருமுறை செலுத்திய விண்ணப்பக் கட்டணம் எந்தக் கணக்கிற்கும் திருப்பித் தரப்படாது அல்லது வேறு எந்தத் தேர்வுக்கும் ஒதுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment