12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 7,547 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க.. - Agri Info

Adding Green to your Life

October 2, 2023

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 7,547 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

 டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7,547 காவலர் (ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) டெல்லி காவல் தேர்வு 2023 ) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (30-09-2023) நிறைவடைகிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமென்பதால், தேர்வர்கள் கடைசி நேரம் வாரம் காத்திருக்காமால் போதிய கால சாவகாசமா இருக்கும் போதே  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:  இந்த பதவிக்காக  நடத்தப்படும்  போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

காலியிடங்கள் விவரம்: மொத்த காலிப்பணியிடங்களில், பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 2491 ஆகவும், ஆண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 4453 ஆகவும் உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் வரிசையின் கீழ் 603 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி 30.09.2023 (இரவு 11.00 மணி) அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் : ஊதிய நிலை 3 (21,700 - 69,100)

கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2023 அன்று 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். பட்டியல்/ பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 8 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்திவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிக்கை: Constable (Executive) Male and Female in Delhi Police Examination-2023

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அறிவு (General Awareness), கணித பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Numerical ability), காரணங்கானல் (Logical Reasoning), கணினி அறிவியில் அடிப்படை (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைக்கடிகாரம், புத்தகங்கள், துண்டுச்சீட்டு, சஞ்சிகைகள், செல்பேசி ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்போன்கள் சிறிய அளவிலான கேமராக்கள், ஸ்கேனர்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் அடையாள அட்டைகளை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment