சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி. தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காலியிடங்கள் விவரம்: 3 வழக்குப் பணியாளர் பணியிடங்கள் (Case Worker) ரூ. 15,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.
கல்வித் தகுதி: BSW / MSW (Counselling Psychology) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முன்னனுபவம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது விபரங்களை 15.10.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல கய அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment