Search

2,000 SBI PO பணிக்கான டெட்லைன் நீட்டிப்பு

 பிஓ (Probationary Officers) பணிக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைன் பதிவு காலக்கெடுவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒத்திவைத்துள்ளது. எஸ்பிஐ பிஓ தேர்வு 2023-க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 3, 2023. ப்ரோபேஷனரி அதிகாரிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in-ல் காலக்கெடு முடிவதற்குள் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.

SBI PO பணிக்கான பதிவு செப்டம்பர் 07-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 2000 காலியிடங்களை நிரப்படும். அட்டவணையின்படி, எஸ்பிஐ பிஓ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023-ல் நடத்தப்படும்.

SBI PO ஆட்சேர்ப்பு 2023-க்கு எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ஐ விசிட் செய்யவும்.

படி 2: முகப்புப் பக்கத்தில், PO ஆட்சேர்ப்புக்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். உங்கள் யூசர் ஐடி-யை பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

படி 4: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி ஆன்லைன் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.04.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் (IDD) சான்றிதழைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் ஐடிடியில் தேர்ச்சி பெற்ற தேதியை உறுதிசெய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment