தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்.28 ஆம் தேதி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 28 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெற இருக்கிறது. இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இதில் 150க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர். மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கிக்கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிடி, டிப்ளமோ, பிஇ, நர்சிங் படிப்பு படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் நேரில் வர வேண்டும். வேலை தேடும் இளைஞர்கள் (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment