தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18-வயது நிரம்பியவர்களும் 33 வயது பூர்த்தியாகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 09.10.2023 கடைசி நாள் ஆகும். பெண் விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் எதுவும் கிடையாது.
சம்பளம் விவரம்: இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.
பிற விவரங்கள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை உண்டு. ஆனால் பணி நிமித்தமாக விடுமுறை ரத்து செய்யப்பட்டால் அதற்கு ஈடாக மற்றொரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
தேர்வு குறித்த முழு விவரங்களையும் தேர்வு அறிவிப்பாணையும் தெரிந்துகொள்ள இந்த இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment