சென்னை பில்டர் காபி தொழில் தொடங்க ₹3.75 லட்சம் வரை மானியம் - அரசு அறிவிப்பு - Agri Info

Adding Green to your Life

October 14, 2023

சென்னை பில்டர் காபி தொழில் தொடங்க ₹3.75 லட்சம் வரை மானியம் - அரசு அறிவிப்பு

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி,  இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்றும்,   மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள்பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

தாட்கோ தொழில்முனைவோர் அறிவிப்பு

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்றும்  கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment