தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020 திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அந்த வகையில், திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும்.
பணியிடத்தின் பெயர் | ஊதிய விகிதம் | காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | கல்வித் தகுதி |
காவலர் | 15,900-50,400 | 25 | தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் |
காவலர் (தொகுப்பூதியம்) | 10,000 | 25 | தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் |
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்;
விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;
விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, பிறந்தநாள் குறித்த சான்று, சாதிச் சான்று நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதல்களின் நகல், அரசு மருத்துவரிடமிருந்த பெறப்பட்ட உடற்தகுதி சான்றிதழ், குற்றவழக்கு ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்;
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவல கத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் samayapurammariamman.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், 621- 112. தொலைபேசி எண் : 04312670460 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment