வளரும் வட்டார திட்ட அலுவலர் பதவிக்கான (Aspirational Blocks Programme) வேலைவாய்ப்பு அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவியின் பெயர் | வளரும் வட்டார திட்ட அலுவலர் |
காலியிடம் | 1 |
பணிக்கான இடம் | திருநெல்வேலி, நாங்குநேரி |
பனிக்காலம் | பதவியேற்ற நாளிலிருந்து 12 மாதங்கள் (அல்லது) நவம்பர் 2024 வரை |
தகுதிகள்:
தகுதியான கல்வி நிலையங்களில் முதுநிலை கல்வி பயின்றிருக்க வேண்டும்.
தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகளை விளக்கம் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
திட்டங்களை நிர்வாகப்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ஊதியம்: ரூ.55,000/- (மாத ஊதியம்) (வரி பிடித்தம் பொருந்தும்)
வளரும் வட்டார திட்ட அலுவலருக்கான பணி மற்றும் கடமைகள் :
1. வளரும் வட்டார திட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல்.
2. திட்டங்களை செயல்படுத்துதல், சவால்களை கண்டறிதல், போன்றவைகளுக்காக தொடர்ச்சியாக களங்களை பார்வையிடல்
3. வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை கூறுதல்
4. உள்ளூர் சமுக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திறன் வளர்ச்சி பயிற்சிகள் செயல்படுத்துதல்.
5.சிக்கல்கள், சவால்கள் மற்றும் தேவை போன்றவற்றிக்காக மாநில மற்றும் NITI அளவில் இணைந்திருத்தல்.
6. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பிற பொறுப்புகள்.
விண்ணப்பங்களை மாவட்ட இணையதளமான https://tirunelveli.nic.in பதிவு செய்யவும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment