சிறந்த உடல்நலமுடன் மகிழ்ச்சியாக இருக்க நம்முடைய இதயத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும். முக்கிய உறுப்பான இதயம் 1 நிமிடத்திற்கு சராசரியாக 60 முதல் 100 முறை துடிக்கிறது. தவிர ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
அற்புதமான உறுப்பாக இருக்கும் இதயம் நம் உடலின் அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இப்படிப்பட்ட உறுப்பான இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சட்டென்று வெளியில் தெரியாத அறிகுறிகளை கொண்டு சைலன்ட் கில்லராக ஆளையே காலி செய்து விடுகின்றன. ஆரோக்கியமான உணவு, நல்ல மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றினால் மட்டுமே இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்த்து இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அந்த வகையில் நம்முடைய கிச்சனில் அன்றாடம் பயன்படுத்தும் சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் இதை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா குறிப்பிடுகையில், நம் வழக்கமான டயட்டில் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மசாலாவை சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் விவேகமான வழி என்கிறார் இதய நலனை பாதுகாக்க உதவும் மசாலாப் பொருட்களின் பட்டியலையும் ஷேர் செய்துள்ளார். அவை கீழே:
பூண்டு: அனைவரது வீடுகளிலும் தவறாமல் இருக்கும் பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆக்டிவ் காம்பவுண்ட்டாக இருக்கும் Allicin-ஆனது lipid synthesis-ல் ஈடுபடும் என்சைம்களை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தவிர Allicin பிளேட்லெட் அக்ரிகேஷனை குறைக்கிறது. ஆக்ஸிடைஸ்ட் எரித்ரோசைட்ஸ் மற்றும் எல்டிஎல் ஆகியவற்றின் லிப்பிட் பெராக்ஸைடேஷனை தடுக்கிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஸ்டேட்டஸை அதிகரிக்கிறது.
குர்குமின் (Curcumin): குர்குமின் என்பது முக்கிய மசாலாவான மஞ்சளில் உள்ள ஒரு ஆக்டிவ் காம்போனென்ட் ஆகும் மற்றும் இது மஞ்சள் மசாலாவிற்கு அதன் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. இதய ஆரோக்கியம் என்று வரும்போது குர்குமின் நம் ரத்த நாளங்களின் லைனிங்கான endothelium-ன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதய நோயில் குறிப்பிடத்தகுந்த பங்கை கொண்டிருக்கும் inflammation மற்றும் ஆக்சிடேஷனை குறைக்க குர்குமின் உதவுகிறது.
கருப்பு மிளகு: நம்முடைய சமையல்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்று, கருப்பு மிளகு. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதில் காணப்படும் ஆக்டிவ் காம்போனென்ட்டான piperine, கெட்ட கொழுப்பை குறைக்க மற்றும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கின்றன. தவிர கருப்பு மிளகில் vanadium நிறைந்துள்ளது, இது மாரடைப்புக்கு பிறகு இதய செயல்பாட்டை மீட்டெடுப்பதில் கணிசமாக உதவுகிறது.
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில் காணப்படும் ஆக்ட்டிவ் காம்போனென்ட்ஸ்களான cinnamaldehyde மற்றும் cinnamic acid உள்ளிட்டவை நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதனுடன் தொடர்புடைய அழற்சி எதிர்ப்பு பண்புகளின் காரணமாக இதயத்திற்கான பாதுகாப்பு அதாவது கார்டியோ ப்ரோடெக்டிவ் என்று குறிப்பிடப்படுகின்றன.
தனியா: தனியா என்றழைக்கப்படும் கொத்தமல்லி விதைகள் குறிப்பிடத்தக்க ஹைப்போலிபிடெமிக் விளைவை (hypolipidemic action) கொண்டுள்ளன. hypolipidemic action என்பது ரத்த ஓட்டத்தில் லிப்பிட் அளவுகளை, குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ்களை குறைக்கும் திறனை குறிக்கிறது. LDL கொலஸ்ட்ரால் லெவல் அதிகம் காணப்படுவது இதய நோய் அபாயத்திற்கு பங்களிக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகும்.
இஞ்சி: இஞ்சியில் முக்கிய active ingredient-ஆக இருக்கும் மூலப்பொருள் ஜிஞ்சரால் ( gingerol). இது ரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தூண்ட, வலியைக் குறைக்க உதவுகிறது. தவிர இஞ்சி ஒரு ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி ஏஜென்ட்டாகவும் உள்ளது, அதாவது இதய நோயை எதிர்த்துப் போராடுவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment