உங்கள் இதயத்தைப் பாதுகாக்க இந்த 6 பழங்கங்களை கடைபிடிங்க..! - Agri Info

Adding Green to your Life

October 18, 2023

உங்கள் இதயத்தைப் பாதுகாக்க இந்த 6 பழங்கங்களை கடைபிடிங்க..!

 அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான வழி இருந்தால் சொல்லுங்கள்? போன்ற கேள்விகளை இன்று அடிக்கடி நாம் கடந்து போக வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான நபர்கள் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ராலை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் நல்ல கொலஸ்ட்ராலை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்குமோ, நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு அவ்வளவு நன்மை தரக்கூடியதாக அமையும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

கொலஸ்ட்ரால் என்பது கொரோனரி தமனிகளில் படிந்து இருக்கக்கூடிய பிளேக் போன்ற ஒரு பொருளாகும். இது ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் இதய தசைகளுக்கு செல்வதை தடுக்கிறது. நமது செல்களில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளே கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்றாலே அது கெட்டது தான் என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன - ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்று கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).

ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது HDL தமனிகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதற்கு உதவக்கூடியது நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். அதுவே லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் என்பது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய மெழுகு போன்ற பொருள். இவை இதயத்திற்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை தடுத்து, ஹார்ட் அட்டாக் போன்ற மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் சைலன்ட் கில்லர். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எவ்வளவு முக்கியமோ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதும் சமமாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் சில வழிகள்:-

ஆரோக்கியமான உணவு: கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அன்சாச்சுரேட்டட் ஃபேட், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், உணவு நார்ச்சத்து மற்றும் பலவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான வழிகள்.

உடல் செயல்பாடு: உடல் செயல்பாடுகள் மிகக் குறைந்த அளவில் இருக்கக்கூடிய, உட்கார்ந்த வாழ்க்கை முறை கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL அளவை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி ஒரு அற்புதமான வழியாகும். கலோரிகளை எரிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கும் உதவக் கூடும்.

உடல் எடை மேலாண்மை: உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பதற்கு நமது உடல் எடையை சரியான முறையில் மெயின்டைன் செய்வது அவசியம். உடல் பருவனாக இருப்பது அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தி அதன் காரணமாக ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிப்பது மிக மிக முக்கியம்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்: புகை பிடிப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைத்து வேறு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனடியாக கைவிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மது அருந்துவதை குறைக்கவும்: மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ராலை உடைப்பதற்கு வழிவகுக்கும். எனவே மது அருந்துவதை குறைப்பது கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதையும் குறைக்கும்.

புரோட்டீன் நிறைந்த உணவு, நார்ச்சத்து மிகுந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒன்று சேர பின்பற்றுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் வழிகள். நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது நமது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment