நம் வாழ்வையே மாற்றக்கூடிய 7 ஜப்பானிய தத்துவங்கள்.. இதை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி..! - Agri Info

Adding Green to your Life

October 17, 2023

நம் வாழ்வையே மாற்றக்கூடிய 7 ஜப்பானிய தத்துவங்கள்.. இதை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி..!

 ஜப்பான் தன்னுடைய பாரம்பரியத்திற்கும் தனித்துவமான தத்துவங்களுக்கும் மிகவும் பெயர் போன ஒரு நாடாகும். அதிலும் குறிப்பாக சில ஜப்பானிய தத்துவங்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நம் வாழ்வில் செயல்படுத்தினால் அதனால் நம்முடைய வாழ்க்கையையே நம்மால் சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். சரியாக சிந்திப்பதற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இந்த ஜப்பானிய தத்துவங்கள் வழிகாட்டியாக உள்ளன. பல காலத்திற்கு முன் கூறப்பட்ட இத்தத்துவங்கள் இப்போதும், இன்றைய நவீன வாழ்விற்கும் உகந்ததாக உள்ளன. அந்த வகையில் நம் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த 7 ஜப்பானிய தத்துவங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

இகிகாய் :

இகிகாய் என கூறப்படும் இந்த ஜப்பானிய தத்துவம் “ஒரு கருப்பொருள் இருப்பதற்கான காரணம்” அல்லது “காலையில் கண் விழிப்பதற்கான காரணம்” என இரு பொருள் தருகிறது. இத்தத்துவம் 4 கருப்பொருட்களை குறிக்கிறது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறப்பாக இருக்கிறீர்கள், இந்த உலகத்திற்கு என்ன தேவை, உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்ற நான்கு கருப்பொருட்களையும் இந்த தத்துவம் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குள் உள்ள இகிகாய்கையை கண்டறிவது என்பது உங்களுடைய திறமை, ஆர்வம், அதை கொண்டு சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும், மற்றும் அதனால் உங்களது நிதி நிலைமையை எவ்வாறு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை பொறுத்தது. 

எனவே இந்த இகிகாய் தத்துவத்தை பின்பற்ற வேண்டும் எனில் நீங்கள் உண்மையாகவே நீங்கள் எதை நேசிக்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். உங்களுக்குள் இயற்கையாக இருக்கும் திறமையை கண்டறிய வேண்டும். அதனைக் கொண்டு நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும், அதன் மூலம் எவ்வாறு நம் நிதிநிலைமையை வலுவாக்க முடியும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்.

வாபி-சாபி : 

வாபி-சாவி எனப்படும் இந்த பண்டைய கால தத்துவமானது ஒழுங்கற்ற தன்மையில் உள்ள அழகை கண்டறிவதை ஊக்குவிக்கிறது. உடைந்த பொருட்களிலும் பழையவற்றிலும் அனைத்திலும் ஓர் கலைநயம் மிக்க அழகு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதை இத்தத்துவம் விளக்குகிறது. குறிப்பாக இன்றைய கால இளைஞர்கள் அனைத்திலும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுகிறார்கள். இந்த வாபி-சாபி என்பது ஒரு பொருள் அல்லது ஒருவர் எப்படி இருந்தாலும் அவை இயற்கையானது என்பதை உணர்ந்து கொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வாபி-சாபி சாவியை கொண்டு வர வேண்டும் எனில், ஒழுங்கற்ற தன்மைகளை ஏற்றுக் கொள்ள கற்று கொள்ள வேண்டும் உங்களுக்குள் உள்ள குறைபாடுகளையும் உங்களை சுற்றியுள்ள உலகில் இருக்கும் குறைபாடுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் தத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க முடியும். குறிப்பாக பொருட்களும் மனிதர்களும் காலம் கடக்க கடக்க அவர்கள் ஏற்படும் குறைபாடுகளை கண்டு அவர்களை குற்றம் சொல்லாமலும், ஒதுக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நிகழ் காலத்தில் எவ்வாறு முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

கைசென் : 

கைசென் என்பதற்கு தொடர்ச்சியான முன்னேற்றம் என்று பொருள். நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் மேற்கொள்ளும் சிறிய அளவிலான முயற்சி மற்றும் மாற்றங்கள் கூட வாழ்வில் முன்னேற உதவும் என்ற உண்மையை இது உணர்த்துகிறது. நாம் செய்யும் செயல்களில் நாம் மேற்கொள்ளும் மிக மிகச் சிறிய அளவிலான நேர்மறை மாற்றங்கள் கூட ஒட்டுமொத்த நிகழ்வையே மாற்றி அமைக்க வல்லமை கொண்டது என்பதை இது கூறுகிறது.

News18

கைசெனை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க முதலில் சிறிய அளவிலான குறிக்கோள்களை மனதில் கொண்டு அவற்றை நோக்கி வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு பெரிய குறிக்கோள்களை மனதில் வைத்து அதனை நோக்கி முன்னேற வேண்டும். உங்களது உடல் நலனை பேணிக்காப்பது, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது அல்லது உறவுகளை மேம்படுத்துவது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் இந்த கைசென் உதவும்.

ஷின்ரின்–யோகு : 

ஷின்ரின்-யோகு எனும் தத்துவமானது ஆங்கிலத்தில் “ஃபாரஸ்ட் பாத்திங்” என பொருள் படுகிறது. அதாவது ஒரு மனிதர் எப்போதும் இயற்கையுடன் ஒன்றி இருந்து அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதையும், அதிலிருந்து நம்மை குணப்படுத்திக் கொள்ளும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைவது, மனநலனில் மேம்பாடு மற்றும் நமது ஒட்டுமொத்த இயக்கத்திலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.

News18

ஷின்ரின்-யோகு உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அளவு இயற்கையான சூழலில் நேரத்தை செலவிட வேண்டும். காடுகளில் தனியாக இருப்பது அல்லது மரம், செடி, கொடிகள் நிறைந்த பூங்காவிற்கு செல்வது ஆகியவையும், அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பது, சத்தங்கள், காட்சிகள். வாசனைகள் போன்ற அனைத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வது போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.


இதை சரியாக பயிற்சி செய்யும்போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கின்றன. மேலும் நமது கற்பனைத் திறனும் அதிகரிக்கிறது. இவற்றைத் தவிர மனதிற்கு அமைதியான ஒரு சூழலை உண்டாக்கி தருகிறது. இதனால் நமது உடல் மற்றும் மனம் என இரண்டிலுமே சம நிலையான தன்மையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கிண்ட்சுகி : 

கிண்ட்சுகி எனும் இந்த வார்த்தையானது உடைந்த மண்பாண்டங்களை தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினம் கலந்த பொடிகளுடன் சேர்த்து சரி செய்யும் ஒரு கலையை குறிக்கிறது. அதாவது உடைந்த விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் முன்னிலும் சிறப்பாக அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதையும், அதனை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்வது என்பதையும் இத்தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் வாழ்வில் நமக்கு இருக்கும் ஒழுங்கற்ற தன்மைகள் மற்றும் நமது காயங்கள் கூட நமது அழகுக்கும் மனவலிமைக்கும் காரணமாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

News18

உங்கள் வாழ்வில் இத்தத்துவத்தை பயன்படுத்திக் கொள்ள, முதலில் உங்களது கடந்த கால அனுபவங்களை நன்றாக சிந்தித்து எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் நீங்கள் செய்த தவறுகள் மற்றும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களை நினைத்து வருந்துவதற்கு பதிலாக, உங்கள் வாழ்வில் அவற்றின் தனித்தன்மையை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதுவே உங்களது பலமாக மாறி உங்களது வாழ்வை முன்னேற்ற உதவும்.

மோனோ நோ அவேர் : 

இந்த வார்த்தை நிலையற்ற தன்மையின் அழகை குறிக்கிறது. இதன் மூலம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதையும், அனைத்துமே மாறக்கூடியது என்பதையும் நாம் உணர வேண்டும். இத்தத்துவத்தை உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முதலில் நிகழ் காலத்தில் முழுமையாக மனதை செலுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

News18

சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது, பூக்களின் அழகை கண்டு மகிழ்ச்சியடைவது, நமக்கு பிடித்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து நாமும் மகிழ்ச்சி அடைவது போன்ற பல்வேறு விஷயங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நமது வாழ்வை நன்றி உணர்வுடனும் முழுமையாகவும் வாழ முடியும்.

ஓமோடெனாஷி : 

ஒமோடெனாஷி என்னும் இந்த தத்துவமானது சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவக்கூடிய தன்மையை உணர்த்துகிறது. முழு மனதோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதனை இது உணர்த்துகிறது. இத்தத்துவம் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றத்தை கொண்டு வர முதலில் சுயநலமற்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மற்றவர்களுடன் பழகும் போது அன்பாகவும் பண்பாகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பழக வேண்டும். இதன் மூலம் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உதவுவதனால் கிடைக்கும் அளப்பரிய சந்தோஷத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment