நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை.. முழு விவரம் இதோ.. - Agri Info

Adding Green to your Life

October 2, 2023

நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை.. முழு விவரம் இதோ..

 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள் தனியார் நிறுவனத் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கீழ்கண்ட சான்றிதழை தயார் செய்து பாளையங்கோட்டை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 25.10.2023 காலை 10 மணி முதல் 31.10.2023 மாலை 6 மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு தகுதிகளாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

இதற்கான ஆவணங்களாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கலர், கல்வி தகுதி சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), மருத்துவத் தகுதிச் சான்று (அரசு மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்), சுயவிவர படிவம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்” என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment