இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களிடம் இந்த திறமைகள் இருக்கும்!! - Agri Info

Adding Green to your Life

October 17, 2023

இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களிடம் இந்த திறமைகள் இருக்கும்!!

 ஒவ்வொரு நபரின் பழக்கவழக்கங்களும் மற்றொரு நபரிடமிருந்து வேறுபட்டவை. அதே நேரத்தில், அவரை கூட்டத்திலிருந்து வேறுபடுத்தவும் இது உதவுகிறது. நம்மில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அதே நேரம் இடது கை பழக்கம் உடையவர்களிடம் சில விசேஷ திறமைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒருவருடைய இயல்பும் வாழ்க்கை முறையும் மற்றொருவரிடமிருந்து வேறுபட்டது. ஒருவர் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறார், பேசும்போது அவருடைய வெளிப்பாடுகள் என்ன, இவை அனைத்தும் அவரது ஆளுமையைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. உங்களில் பலர் உங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இடது கை பழக்கம் உள்ளவர்களை சந்தித்திருக்கலாம்.

இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் எல்லா வேலைகளுக்கும் இடது கையைப் பயன்படுத்துகிறார்கள். எழுதுவது, எதையாவது தூக்குவது, விளையாடுவது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்கும் இடது கையைப் பயன்படுத்துவதைக் காணலாம். அப்படிப்பட்டவர்களின் ஆளுமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

இடது கையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியுமாம். அவர்கள் எதிர் வரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

படைப்பாற்றல்

இடது கை பழக்கம் உள்ளவர்களின் மூளை வலது கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக, அவர்கள் அறிவை எளிதில் பெறுகிறார்கள். படைப்பாற்றலும் அவர்களிடம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

போட்டிகள்

போட்டியைப் பொறுத்தவரை இவர்களின் திறன் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர்கள் டென்னிஸ் அல்லது கோல்ஃப் போன்ற விளையாட்டுகளை விளையாடினால், அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கை மேம்பாடு

இடது கை பழக்கம் உடையவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிறந்த முறையில் மேம்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களின் பயணத்தில் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும், அது அவர்களை எதிர்காலத்தில் பிரபலமாக்கும். அவர்களின் ஆளுமை கவர்ச்சியானது.

மல்டி டாஸ்க்

மல்டி டாஸ்க் எனப்படும் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதில் இடது கை பழக்கம் உடையவர்கள் வல்லவர்கள். அவர்கள் தைரியமானவர்கள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment