உங்கள் குழந்தப்பருவத்திலும் வளர் இளம் பருவத்திலும் என்ன விதமான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அது உங்கள் உடல்நலத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். பதின் பருவ குழந்தைகள், குறிப்பாக சிறுமிகளுக்கும் இது பொருந்தும். இந்த வயதில் உள்ள சிறுமிகள் தங்கள் உடல்நிலையில் பல மாறுதல்களை எதிர்கொள்வார்கள். இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் தேவைப்படும்.
வளர் இளம் குழந்தைகள், குறிப்பாக டீனேஜ் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை இந்த வயதில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறர் ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி சுதாகர். இளம் பெண்களின் பருவமடையும் காலம் எந்தவித சிக்கல் இல்லாமல் இருக்கவும், அவர்களின் ஆரோக்கியமான ஹார்மோன் வளர்ச்சிக்கும், வாழ்க்கை முழுவதும் தொந்தரவு தராத வகையில் மாதவிடாய் செயல்பாட்டிற்கும் உதவி செய்யக் கூடிய மூன்று முக்கியமான விசேஷ உணவுகளை ஷாலினி பரிந்துரைக்கிறார்.
முருங்கை பொடி: பெண்களின் ஹீமோகுளோபின் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் எந்த வகையிலாவது ஒரு டீ ஸ்பூன் முருங்கை பொடியை வளர் இளம் பெண்கள் சாப்பிட வேண்டும்.
ஆளி விதைகள்: கால்சியம், இரும்புச்சத்து, மாக்னீசியம், வைட்டமின் சி, இ மற்றும் கே என பல ஊட்டச்சத்துகள் ஆளி விதைகளில் உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான ஹார்மோன் சுரப்பதற்கு இது மிகவும் அவசியமாகும்.
2 உலர்ந்த அத்திப்பழம்: பல ஊட்டசத்துகள் அடங்கிய இந்தப் பழத்தை நாம் பெரும்பாலும் தவிர்த்தே வருகிறோம். அத்திப் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகளவு உள்ளது. இது நமது ரத்தத்தை சுத்திகரிக்கும். அதுமட்டுமின்று நம்முடைய ஹீமோகுளோபினையும் அதிகப்படுத்தும். வளர் இளம் பெண்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான மூன்று வகையான உணவுகளை பரிந்துரைக்கிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர்.சுரபி சித்தார்தா.
கால்சியம் நிறைந்த உணவுகள்: வளர் இளம் பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். தினமும் இவர்களை பால், தயிர், சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட சொல்லுங்கள். லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது ஏதாவது டயட் கட்டுப்பாடு இருந்தால் கால்சியம் அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகளான காலே, ப்ரோகோலி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்: நம் ரத்தம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒட்டுமொத்த உடல் ஆற்றலுக்கும் இரும்புச் சத்து மிகவும் அவசியமாகும். லீன் புரொட்டீன் கொண்ட இறைச்சி உணவுகள், மீன், பீன்ஸ், பருப்புகள், வலுவூட்டப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. இரும்புச் சத்து உணவுகளோடு சேர்த்து வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடும் போது நம் உடலுக்கு இரும்புச் சத்து அதிகமாக கிடைக்கிறது.
முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து: நம் உடல் எடையை சீராக பராமபரிப்பதற்கும் செரிமான ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து மிகவும் உதவுகிறது. முழு கோதுமை பிரெட், சிவப்பரிசி, குயினா, ஓட்ஸ், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது வளர் இளம் பருவ பெண்களுக்கு தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment