Nagapattinam District Job Alerts: நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஊதியம்: ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.12,000- வழங்கப்படும்.
அடிப்படைத் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: தேசிய நலக்குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு முன்அனுபயம் பெற்றிருக்க வேண்டும். கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரக வளாகம், முதல் நுழைவுவாயில், நாகப்பட்டினம் - 611 003, தொடர்புக்கு - 04635 253036 என்ற முகவரிக்கு 19/09/2023 முதல் 02/10/2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here for latest employment news
No comments:
Post a Comment