அதிகமாக ஏப்பம் விடுவது கூட புற்றுநோய் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..! - Agri Info

Adding Green to your Life

October 21, 2023

அதிகமாக ஏப்பம் விடுவது கூட புற்றுநோய் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..!

 ஏப்பம் விடுவது சாதாரன உடலியல் செயல்பாடு. வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வாய் வழியாக வெளியேற்றுவதே ஏப்பம் விடுதல். செரிமானம் நடைபெறும் போது, நம் உடலில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேறுகிறது. இந்தக் காற்றில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆகியவை கலந்திருக்கும்.

எனினும், வழக்கத்தை விட அதிகமான ஏப்பம் உங்களுக்கு வந்தாலோ அல்லது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தாலோ அதை நாம் கொஞ்சம் தீவிரமான பிரச்சனையாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருசில நேரங்களில் இது புற்றுநோயாக கூட இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது?

நீங்கள் வேகமாக சாபிடும்போதோ அல்லது ஏதாவது குடிக்கும் போதோ காற்று உடலுக்குள் போய்விடும் அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் நிறைய சூயிங்கம் சுவைக்கும் பழக்கம் இருந்தால் ஏப்பம் அடிக்கடி வரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஏப்பம் விடும்போது சத்தமும் வயிற்று வலியும் வரும்.

News18

ஏப்பம் விடுவது புற்றுநோய்க்கான அறிகுறியா?

வெறுமனே ஏப்பம் விடுவது மட்டுமே புற்றுநோயின் அறிகுறி ஆகாது. இவற்றோடு வலியும் வீக்கமும் இருந்தால் தான் அது குறிப்பிட்ட இரைப்பை குடல் புற்றுநோயாக இருப்பதற்கான வாய்புள்ளது என பல அய்வுகள் தெரிவிக்கின்றன.

பல வகையான புற்றுநோய்கள் ஒருவரின் செரிமானப் பாதையை தடுக்கிறது. இதன் காரணமாக அவருக்கு வாய்வுத் தொல்லையும் அஜீரணக் கோளாறும் ஏற்படுகிறது. அதிகமாக ஏப்பம் விடுவதும் இதில் அடங்கும்.

மற்ற அறிகுறிகள்

-காரணமில்லாமல் உடல் எடை குறைதல்
- நாள்பட்ட காய்ச்சல்
- ரத்தக்கசிவு
- அடிவயிற்றில் வலி
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்

எந்த வகையான புற்றுநோய்க்கு ஏப்பம் அறிகுறியாக இருக்கும்?

கீழ்கண்ட புற்றுநோய்கள் முற்றிய தருவாயில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்:

  1. வயிறு அல்லது இரைப்பை புற்றுநோய்

  2. உணவுகுழாய் புற்றுநோய்

  3. கணைய புற்றுநோய்

அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஏப்பம் விடும் பழக்கமும் இருக்கும். இந்த அறிகுறிகள் இருக்கும் நபர்கள் உணவுக்குழாய் அல்லது கணைய புற்றுநோயால் பாதிக்கபட்டிருப்பார்கள். மேலும் எச். பைலோரி தொற்றினால் நாள்பட்ட வீக்கம் உண்டாகி அல்சரையும் இரைப்பை புற்றுநோயையும் உருவாக்கும். எச். பைலோரி இருக்கும் நபர்களில் 10 சதவிகிதத்தினருக்கு வயிற்றுப் புண் நோயும் 1-3 சதவிகித நபர்களுக்கு இரைப்பை புற்றுநோயும் ஏற்படுகிறது.

ஏப்பம் விடுவதை எப்படி தவிர்ப்பது?

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது என சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் இதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏப்பம் விடுவது தீவிரமான பிரச்சனையாக இல்லாதபட்சத்தில் நமது வாழ்க்கைமுறையை மாற்றினாலே போதுமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…

  • சாப்பிட்டதும் சிறிய நடை செல்லுங்கள். குறிப்பாக இரவில் -

  • சாப்பிட்டதும் கட்டாயம் இதை கடைபிடியுங்கள்.

  • கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கத்தை நிறுத்துங்கள். அதேப்போல் சூயிங்கம்மையும் அடிக்கடி சுவைக்காதீர்கள்.

  • எதையும் மெதுவாக சாப்பிடுங்கள், குடியுங்கள்

  • புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

  • புற்றுநோய் காரணமாக அதிகப்படியான ஏப்பம் வந்தால் கிழ்கண்ட

  • சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

  • கீமோதெரபி

  • அறுவை சிகிச்சை

  • கதிர்வீச்சு சிகிச்சை

  • மருந்துகள் 🔻 🔻 

No comments:

Post a Comment