தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:
1. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.
2. வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. தொகுப்பு ஊதியம்: ரூ. 12,000/-
4. முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர்அமைப்பு தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.
5. இருப்பிடம்: விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .
6. பாலினம்:பெண்கள் மட்டும்
7. மொத்த காலியிடங்கள் : 2
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-25.10.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம்.
பொது நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ எதிர்வரும் 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை thoothukudi.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment