மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும்.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றம் செய்கின்ற இன்சுலினை சர்க்கரை நோயாளிகளின் கனையம் சுரக்காமல் போவதால் தான் இந்தப் பிரச்சினை வருகிறது. ரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க உதவும் அந்த ஹார்மோன் சுரக்காத நிலையில், வயிற்றுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியுள்ளது.
அதிலும் இதய நோய்கள், உடல் பருமன், ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் என பல நோய்களுக்கு சர்க்கரை நோய் அடித்தளமாக அமைவதால் நாமே உணவுக் கட்டுப்பாடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். இத்தகைய நிலையில், சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடத்தக்க வகையில் 5 விதமான ஸ்மூத்திகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
பெர்ரி - வாழைப்பழம் - காலிஃபிளவர் ஸ்மூத்தி : சர்க்கரை நோயாளிகள் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை பெருமளவுக்கு உயராது. அந்த வகையில் காலிஃபிளவர் மற்றும் வாழைப்பழம், பெர்ரி பழம் ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம்.
அன்னாசிப்பழம் - திராட்சை ஸ்மூத்தி : அன்னாசிப்பழம் மற்றும் திராட்சையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் மினரல்கள் ஆகியவற்றை வழங்கும். அன்னாசி - திராட்சை ஸ்மூத்தி அருந்தினால் உடலுக்கு புதுமையான உத்வேகம் கிடைக்கும்.
பீச் ஸ்மூத்தி : கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய பீச் பழமானது நல்லதொரு ஸ்நாக்ஸ் போல அமையும். இதில் கால்சியம் சத்து நிறைவாக உள்ளது. இந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொண்டால் உடல் எடை பெருமளவில் குறையும். அதேபோல தயிர் மற்றும் பால் போன்றவை பிடிக்காத நிலையில் நம் உடலுக்கு எலெக்ட்ரோலைட் சத்து கிடைக்க இளநீர் அருந்தலாம்.
க்ரீன் ஸ்மூத்தி :பச்சை நிறத்தில் அமைகின்ற ஸ்மூத்தி பார்த்தவுடன் நம் சுவை உணர்வை தூண்டும். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலக்கீரை மற்றும் அவகோடா பழம் ஆகியவற்றுடன் பாதாம் பட்டர் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கலாம்.
கடலை பட்டர் ஓட்மீல் ஸ்மூத்தி : மிகுதியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய ஸ்மூத்தியை விரும்பும் நபர் என்றால் இந்த கடலை பட்டர் ஓட்மீல் ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதொரு சத்துமிக்க உணவாக அமையும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment