கிராமப்புறங்களுக்கு ஏற்பட லாபத்தை அள்ளித் தரும் சில பிஸ்னஸ் ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
டீ ஷாப் : டீ யை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆட்கள் அதிகம் கூடும் இடங்களில் டீக்கடை வைத்தால் லாபத்தை அள்ளலாம்.
சில்லறை விற்பனை கடை : கிராமப் புறங்களில் மக்கள் மொத்தமாக பொருட்களை வாங்குவதை காட்டிலும் சில்லறைகளில் வாங்குவதற்கே அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறிய மளிகை கடைகள், வெற்றிலை பாக்கு மிட்டாய் கடைகள் கணிசமான லாபம் கொடுக்கும்.
பால் விற்பனை – பால் அத்தியாவசிய தேவை என்பதால் இந்த பிஸ்னஸை கவனத்துடன் பார்ப்பவர்களுக்கு லாபம் நிச்சயம். இந்த வேலைக்கு அதிக உழைப்பை கொட்ட வேண்டியது ஏற்படலாம்.
மாவு மில் – இந்த பிஸ்னஸிற்கு முதலீடு அதிகம் தேவை. ஒரு முறை முதலீடு செய்து விட்டால் அதிலிலிருந்து கணிசமான லாபம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதுவும் அத்தியாவசிய தேவை கொண்ட பொருள் என்பதால் கவனத்துடன் வேலை பார்த்தால் லாபம் உறுதி.
மெடிக்கல் ஷாப் – சிட்டி முதல் கிராமம் வரை லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்களில் இதுவும் ஒன்று. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருமே தவிர குறையாது.
கோழி பண்ணை – கிராமங்களில் அதிக இடம் உடையவர்கள் இந்த பிஸ்னஸை முயற்சிக்கலாம். கொஞ்சம் முன் அனுபவம் அவசியம். சரியான நபர்களை வேலைக்கு வைத்து பார்க்கும் போது லாபத்தை அள்ளலாம்.
எண்ணெய் மில் – தேங்காய், எள், கடலை உள்ளிட்ட கிராமங்களில் விளையும் பொருட்கள் எண்ணெயாக மாற்றப்படுகின்றன. எண்ணெய் மில் இல்லாத இடத்தில் இதனை ஆரம்பிக்கலாம்.
சிப்ஸ் தொழில் – அதிகம் கவனம் பெறாத அதே சமயம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் தொழிலில் இதுவும் ஒன்று. உங்கள் மாஸ்டரிக் கைப் பக்குவம் சூப்பர் என்றால் பணம் குவிவது உறுதி.
🔻🔻🔻
Click here for latest employment news
0 Comments:
Post a Comment