நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..? தெரிஞ்சுக்கோங்க..!🔻🔻🔻 - Agri Info

Adding Green to your Life

October 3, 2023

நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..? தெரிஞ்சுக்கோங்க..!🔻🔻🔻

 அவித்த முட்டை, ஆம்லெட், ஆஃபாயில், கலக்கி, பொறியல் என பற்பல ரூபங்களில் நாம் விரும்பிச் சாப்பிடுகின்ற முட்டை, சுவையான உணவு மட்டுமல்ல, சத்தானதும் கூட.

நம் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நபர்கள் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதே சமயம், முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நினைப்பவர்களும் கூட மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு, வெள்ளைக்கரு பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதெல்லாம் சரி, நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா, கெட்டதா? ஏற்கனவே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி, அனேக உணவை ஒதுக்கி வைத்துள்ள அவர்கள் முட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது.

வழக்கம் போல எப்போதாவது ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், தினசரி முட்டை சாப்பிடக் கூடாது என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. ஆமாம், தினசரி முட்டை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கிறதாம்! அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுகின்ற நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு 39 சதவீதம் வரையில் அதிகரிக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அதிலும், சீனாவில் உள்ள மக்களுக்குத்தான் இதுபோன்ற பாதிப்பு அதிகமாக இருக்கிறதாம்.

இதேபோல, சர்க்கரை நோய் அல்லாதவர்களுக்கும் கூட தினசரி முட்டை சாப்பிடுவதால் அந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கும் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. முட்டை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்க்கான அபாயம் 60 சதவீதம் அதிகரிக்கிறது என்றும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் அபாயம் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், சீன மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. சீனாவில் முட்டை சாப்பிடும் பெரியவர்களுக்கு எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்று இந்த ஆய்வில் கூர்ந்து நோக்கியுள்ளனர்.

பாக்டீரியா தொற்று கூட பரவுமாம் : சில சமயம், மலக் கழிவுகளுடன் கோழிகள் தொடர்பில் இருப்பதால், சல்மோனெல்லா என்ற பாக்டீரியா பரவுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் ஆய்வு எச்சரிக்கிறது. இத்தகைய சூழலில் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில சமயம் உயிரிழப்பு கூட ஏற்படும்.

அதேபோல தொற்று பாதிக்கப்பட்ட கோழிகள் இடுகின்ற முட்டைகள் மூலமாகவும் நோய் பரவக் கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படும் சில கோழிகள் அதிலிருந்து வெகுவிரைவில் விடுபடுகின்றன. அதே சமயம், வேறு சில கோழிகள் நீண்ட காலம் கழித்தும் கூட தொற்றுடன் முட்டையிடுகிறது.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment