புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர்ப்பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து பருவ காலத்தில் இங்கு வரும் சில பறவைகள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.
டார்டர், பிளெமிங்கோக்கல், மவுண்ட் கோன்ஸ், வெள்ளை ஐபிஎஸ், ஸ்பூன் மில்ஸ் மற்றும் சாம்பல் உள்ளிட்ட பெரும்பாலான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகையில் பறவைகளை ஆற்றங்கரை அல்லது கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும்.
இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் மிக முக்கிய சுற்றுலா தளமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் வந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் இதைக் காண ஆர்வமுடன் வருவார்கள். இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சென்னை உள்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை வந்து அடைய முடியும். இதுபோக வட மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் பேருந்து மூலமாகவோ அல்லது தங்கள் சொந்த வாகனம் மூலமாகவோ வேடந்தாங்கல் சரணாலயத்தை பார்வையிட முடியும்.
தற்போது சீசன் காலம் தொடங்கும் நிலையில் சுமார் 20,000 மேற்பட்ட வகையிலான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. எனவே, பறவைகளை காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் அனைத்து நாட்களும் கண்டுக்களிக்கலாம். பெரியவர்களுக்கு 25 ரூபாயும் சிறியவர்களுக்கு ஐந்து வயதுக்கு மேல் 5 ரூபாயும் வீடியோ கேமரா எடுத்துச் சென்றால் 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment