புது வீடு வாங்குற ஐடியா இருக்கா? அதுக்கு முன்னாடி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்! - Agri Info

Adding Green to your Life

October 27, 2023

புது வீடு வாங்குற ஐடியா இருக்கா? அதுக்கு முன்னாடி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

 “வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்று சும்மா எல்லாம் சொல்லல. ஆம், வீடு வாங்குவது மற்றும் திருமணம் செய்வது என்பது நமக்கு மன அழுத்தம் தரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரலாம்.

வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது என்பது பலரது கனவாக இருந்தாலும் அதனை பற்றிய முழு விவரமும் தெரியாமல் காலை விடுவது உங்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு சேர்த்து விடலாம். உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டை வாங்க வேண்டுமா? அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டுமா?

இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. வீட்டை வாங்குவதற்கு முடிவு செய்வதற்கு முன்பு வாடகை வீடு மற்றும் சொந்த வீடு ஆகிய இரண்டிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை ஒப்பிட்டு பாருங்கள். உங்களது வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு ஈடு கொடுக்க முடியும் அளவுக்கு ஒரு வீட்டை உங்களால் வாங்க முடியுமா என்பதை யோசிங்கள். மறுபுறம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது நீண்ட கால அர்ப்பணிப்பு கொண்ட பலவித நன்மைகளுடன் வருகிறது. ஆகவே ஒரு வீட்டை கட்டி அதை பராமரிப்பதற்கான பொறுப்புகள் முழுவதையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது வாடகை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதற்கான பணத்தை உங்களால் புரட்ட முடியுமா?

வீடு வாங்குவதற்கு முன்பு நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இது. உங்களது வருமானம், சேமிப்பு மற்றும் கடன் ஆகிய பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான பணத்தை உங்களால் புரட்ட முடியுமா என்பதை பொறுமையாக யோசித்துப் பாருங்கள். லோன் EMIகள், இன்சூரன்ஸ் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கான வருமானம் உங்களிடம் உள்ளதா என சிந்தியுங்கள். ஒருவேளை நீங்கள் ஹோம் லோன் மூலமாக வீடு வாங்க நினைத்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர், கடன் வழங்கும் நிறுவனத்தை அல்லது வங்கியை திருப்தி அடைய செய்யுமா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

டவுன் பேமெண்டிற்கு ஏதேனும் பணத்தை சேமித்து உள்ளீர்களா?

பெரும்பாலான கடன் வழங்குனர்கள் ஒரு வீட்டை கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ ஆக கூடிய டவுன் பேமெண்டை கடன் பெறுபவரே தர வேண்டும் என்று கூறுகிறார்கள். இது நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தின் விலையில் 20 சதவீதம் இருக்கும். ஆகவே டவுன் பேமெண்ட் செலுத்துவதற்கு உங்களிடம் போதுமான தொகை இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். டவுன் பேமெண்ட்டையும் கடனாக வாங்கி கொடுப்பது நல்ல யோசனையாக இருக்காது. எனவே லோன் வாங்குவதற்கு முன்பு டவுன் பேமெண்ட் தொகையை சேமிப்பு மூலமாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் நீங்கள் வாங்கப் போகும் புதிய வீட்டில் குறைந்தபட்சம் 5 முதல் 7 வருடங்கள் தங்கி இருப்பீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மனதில் கொண்டே உங்களது எதிர்கால திட்டங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

தயார் நிலையில் இருக்கக்கூடிய வீட்டை வாங்க வேண்டுமா அல்லது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை வாங்க வேண்டுமா?

இந்த கேள்விக்கான முடிவு பல காரணிகளை சார்ந்திருக்கலாம். முதலாவதாக பொருளாதாரம் அடங்கும். தயார் நிலையில் இருக்கக்கூடிய வீட்டை காட்டிலும் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் பொருளாதார செலவு குறைவாக இருக்கலாம். உடனடியாக குடியேற நினைக்கும் நபர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும்.

வீட்டின் உரிமையாளராக மாற தயாராக உள்ளீர்களா?

வீட்டு உரிமையாளர் என்பது வெறுமனே பொருளாதாரத்தோடு நின்று விடுவது அல்ல. வீட்டை பராமரிப்பது மற்றும் பழுது பார்ப்பது, சொத்து தொடர்பான வரிகளை செலுத்துவது, கார்பரேஷன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவது போன்ற பல விஷயங்களும் இதில் அடங்கும். இதுபோன்ற கூடுதல் செலவுகளை ஏற்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் பொருளாதாரம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இறுதியாக ஒரு வீட்டை வாங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்களது பொருளாதார சூழ்நிலை, இலக்குகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் முடிவாகும். நீங்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இந்த கேள்விகள் நிச்சயமாக உதவியாக இருக்கும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment