டயட் சார்ந்த உணவுகளுக்கும், உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் காய்கறிகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்படியான சில காய்கறிகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
குடை மிளகாய் : குடை மிளகாய், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் உடலுக்கு அழற்சியை உருவாக்கும் என பல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். நைட்ஷேட் காய்கறிகள் என அழைக்கப்படும் இதை அதிகமாக சாப்பிடும் போது இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இது தொடர்பாக நடந்து வரும் ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை. இந்த நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடும் போது உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.
ப்ரோகோலி : டயட் சார்ந்த உணவுகளில் முக்கியமாக இடம்பெரும் ப்ரோகோலி மிகவும் சத்துள்ள காய்கறியாக கருதப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் வயிறு உப்பசம் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.
பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் (கிளைக்கோஸ்) : ப்ரோகோலி போல் இந்த பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் காய்கறியும் வாயுவை உண்டாக்க கூடியது. இதற்கு காரணம் இந்த காய்கறியில் அதிகளவு ரஃபினோஸ் மற்றும் சல்பேட் இருக்கிறது. இது காரத்தன்மையையும் அதிகரிக்கிறது.
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் : இந்தக் காய்கறிகளில் அதிகளவு உப்பு மற்றும் சுவையூட்டிகள் இருப்பதால், உங்கள் செரிமானத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு வயிற்றுப் பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் இதில் சோடியம் அளவு அதிகப்படியாக இருக்கும். இது நிச்சயம் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
செலரி : செலரியை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கலோரிகளை குறைக்கலாம் என்று கூறினாலும் இதில் எந்த ஊட்டச்சத்துகளும் கிடையாது. மேலும் இதில் 68 வகையான பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
சோளம் : பலரும் விரும்பி சாப்பிடும் சோளத்தில் மரபணு மாற்றம் செய்யபட்டதன் காரணமாக, அதை சாப்பிடும்போது நம் உடலுக்கு பரிட்சியம் இல்லாத புரதம் கிடைக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
கத்தரிக்காய் : இதன் சுவைக்காகவே இறைச்சி உணவுகளுக்கு மாற்றாக அனைவராலும் விரும்பப்படுகிறது கத்தரிக்காய். ஆனால் இதிலிருக்கும் சுவைதான் பிரச்சனையே. இது நம் உடலில் கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கிறது.
உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி இருந்தாலும், இதன் தோலை சீவி, உப்பு சேர்த்து வறுத்தே நாம் சாப்பிடுகிறோம். இதன் காரணமாக இதிலுள்ள சத்துக்கள் எல்லாம் நமக்கு கிடைப்பதில்லை.
கீரைகள் : மிகவும் ஆரோக்கியமான கார்கறிகளில் ஒன்றாக கருதப்படும் கீரைகளில் அதிகளவு விட்டமின் ஏ மறும் விட்டமின் கே உள்ளது. மேலும் இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆனால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகளை உண்ணும் போது அதில் 50-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பதை மறந்து விடாதிர்கள்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment