டெங்கு கொசு எப்போது கடிக்கும்..? எப்படி கண்டறிவது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

October 4, 2023

டெங்கு கொசு எப்போது கடிக்கும்..? எப்படி கண்டறிவது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 மழைக்காலம் தொடங்கிவிட்டது! மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி ஊட்டும் காலமாக இருந்தாலும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் காலமாகவும் மாறியிருக்கிறது. டெங்கு சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள், தேங்கியிருக்கும் மழைநீரில் பெருகும் கொசுக்களால் அதிவேகமாக பரவுகின்றன. ஏடிஸ் என்று கூறப்படும் ஒரு கொசு வகை இரவில் தான் கடிக்கும் என்ற தகவல் பரவி வருகிறது. இது எவ்வளவு உண்மை, இந்த ஏடிஸ் கொசுவால் டெங்கு பரவுகிறதா என்பதைப் பற்றி பார்க்கலாம்.

டெங்கு வைரசை சுமந்து செல்லும் கொசு ஒரு நபரை கடித்து, மற்றவரை கடிக்கும் பொழுது அது டெங்கு வைரஸ் காய்ச்சலை மிகச்சுலபமாக பரப்பி விடுகிறது. இந்த வைரஸில் நான்கு வகையான சீரோடைப்புகள் உள்ளன. இவை DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 ஆகும். நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக பதிவாகி இருக்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவநிலை எப்போது எப்படி மாறும் என்று தெரியாத சூழல், திடீரென்று அதிக மழை, என்று அனைத்துமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், புதிதாக பரவி வரும் பல விதமான வைரஸ்களும் டெங்கு தொற்றை தீவிரமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு கொசு இரவில் கடிக்குமா?

பொதுவாக இரவு நேரத்தில் அதிகமாக கொசுக்கடியை பலரும் பார்த்திருக்கலாம். எனவே இரவு நேரத்தில் மட்டும் தான் கொசுக்கள் கடிக்கும் பகல்நேரத்தில் கொசுக்கள் கடிக்காது என்ற ஒரு தவறான நம்பிக்கை பலரிடமும் காணப்படுகிறது. பகல் நேரத்தில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா போன்ற தொற்றுகளை எந்த அளவுக்கு ஒரு கொசுவால் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ, அதே அளவுக்கு இரவு நேரத்திலும் தீவிரமான டெங்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும். சூரிய அஸ்தமனமான 2 மணி நேரம் பின்பும், அஸ்தமனத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு வரை கொசுக்கள் சுறுசுறுப்பாக இயங்கி வரும். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு மனிதனை கொசு கடிப்பது என்பது மிகவும் அரிதான செயல் என்று கூறப்படுகிறது.

அதேப்போல ஒரு நபரை கொசு எந்த இடத்தில் கிடைக்கிறது என்பதுகூட டெங்கு காய்ச்சலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை பற்றி வெளியான அறிக்கையின்படி டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசுக்கள், பெரும்பாலும் கை முட்டி மற்றும் கால் முட்டி (ankle and elbow) ஆகிய பகுதிகளில் தான் கடிக்கிறது என்று வெளியாகியிருக்கிறது. சின்னதாக கடித்தால் கூட, நோய் தொற்று ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் : 

டெங்கு கொசு கடித்த 4 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் தொற்று உடலில் பரவி அறிகுறிகளை தோற்றுவிக்கும். இந்த அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் ஏற்படக்கூடிய டெங்கு தொற்றின் அறிகுறிகள் மாறுபடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவருக்கு ஏற்கனவே இருக்கும் உடல் நல பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிகுறிகள் மாறுபடும். பொதுவான அறிகுறிகளாக, காய்ச்சல், எலும்பு வலி & அசௌகரியம், தசை வலி, உடல் அசதி’, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை கூறப்படுகிறது.

2015 ஆம்ஆண்டு முதல், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு ஆண்டுமே அதிக அளவில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. மற்றும் ஒரு நபர் இறந்துள்ளார் என்பது பதிவாகி இருக்கிறது. யமுனை நதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த ஜூலை மாதம் வெள்ளம் டெல்லியில் வருவது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டது. அதையடுத்து மழைக்காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தீவிரமான மழை ஆகியவை டெங்கு பாதிப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment