Search

நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகும் புதிய ஹெல்த் ட்ரெண்ட் "சைலன்ட் வாக்கிங்'.. நன்மைகள் என்ன..?

 பெருந்தொற்றுக்கு பிறகு உடல் நலனை பாதுகாத்து கொள்வது குறைத்த அக்கறை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் வேறு எந்த ஒர்கவுட்ஸ்களை செய்ய நேரம் இல்லாவிட்டாலும், பலர் தினசரி வாக்கிங் செல்லும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

நீங்களும் ரெகுலராக வாக்கிங் செல்லும் நபர் என்றால் சமீப வாரங்களாக புதிய ஹெல்த் ட்ரெண்டாகி வரும் சைலன்ட் வாக்கிங் பற்றி நீங்கள் இங்கே தெரிந்து கொள்வது அவசியம். உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதில் வாக்கிங் முக்கிய பங்கு வகிக்கிறது. வாக்கிங் செல்பவர்களின் பலரும் காதில் ஹெட்ஃபோன் அல்லது இயர் ஃபோனை மாட்டி கொண்டு தங்களுக்கு பிடித்த மியூசிக் அல்லது பாடல்கள் அல்லது வேறு சிலவற்றை காதால் கேட்டு மகிழ்ந்து கொண்டே வாக்கிங் செல்கிறார்கள்.

இன்னும் சிலர் நண்பர்கள் அல்லது லைஃப் பார்ட்னரை வாக்கிங் மேட்-ஆக கூட சேர்த்து அரட்டை அடித்து கொண்டே வாக்கிங் செல்வார்கள். ஆனால் ஹெட்ஃபோன் போன்ற டிவைஸ் அல்லது கம்பெனி சேர்த்து பேசி கொண்டே நடப்பது உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் ஒருவர் நடைபயிற்சியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி தனியாக நடப்பதே சைலன்ட் வாக்கிங் ஆகும். இந்த லேட்டஸ்ட் ஹெல்த் ட்ரெண்ட் TikTok-ல் வைரலாகி வருகிறது. பேசாமலோ அல்லது பிடித்த இசையை கேட்காமலோ அமைதியாக நடப்பது, மன ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. சைலன்ட் வாக்கிங் செல்லும் போது மூச்சு பயிற்சியை போலவே உங்களது சுவாசத்தை ஆழ்ந்து கவனிப்பது, கடல், நீர் மற்றும் பறவைகளின் சத்தங்களைக் கேட்பது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும்.

சைலன்ட் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்: ஸ்ட்ரஸ் ரிலீஸ்: இசையை கேட்காமல் அல்லது பேசாமல் நடப்பது அமைதியான உணர்வை தருகிறது. இந்த அமைதி மூலம் ஸ்ட்ரஸ் ஹார்மோன் என குறிப்பிடப்படும் கார்டிசோலின் அளவு குறைகிறது மற்றும் பதற்றம் தணிகிறது. இதன் மூலம் மனஅழுத்தம் கணிசமாக குறைகிறது.

எமோஷ்னல் கன்ட்ரோல்: உங்களது தினசரி வாக்கிங்-ஐ கவனச்சிதறல் அற்ற சைலன்ட் வாக்கிங்-ஆக மாற்றுவது உங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. எதிர்பாரா விஷயங்களை அல்லது கடினமான சூழலை கையாளும் போது சட்டென்று முடிவெடுக்காமல் ஆசுவாசமாக இருப்பது நம்முள் எழும் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதனை மிகவும் திறம்பட கையாள சைலன்ட் வாக்கிங் உதவும்.

கவனத்தை மேம்படுத்துகிறது: ஒரு நபர் முழு கவனத்துடன் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது அவரது செயல்திறன் மற்றும் மன அமைதி மற்றும் மனத்தெளிவை மேம்படுத்த உதவுகிறது. வேறு விஷயங்களில் கவனம் சிதறிவிடாமல் நடைபயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் குவிக்க சைலன்ட் வாக்கிங் உதவுகிறது. அமைதியாக நடப்பது உங்களை தற்போதைய தருணத்தில் வைக்கிறது. சைலன்ட் வாக்கிங் செல்வது கடந்த கால நிகழ்வுகள் அல்லது தேவையற்ற வேறு விஷயங்களை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் உங்கள் மனதின் எண்ணங்களை வைத்திருக்க தூண்டுவதன் மூலம் உங்களது கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கிறது.

தூக்க தரம் மேம்படும்: சைலன்ட் வாக்கிங் செல்வது மனதை அமைதியாக மற்றும் தெளிவாக வைப்பதோடு தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. மனதை அமைதியாக வைத்து கொண்டு வாக்கிங் செல்வது மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருவர் மனதளவில் மிக நிதானமாக இருக்க முடியும் என்பதால் நல்வாழ்வு அதிகரித்து கூடவே தூக்கத்தின் தரமும் அதிகரிக்கிறது.

மனநிறைவு அதிகரிக்கும்: silent perambulation மூலம் சுய விழிப்புணர்வு ஊக்குவிக்கப்படுகிறது. மனம் அமைதியாக இருந்தால் உங்களுக்கும் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் தடையின்றி சுயபரிசோதனை செய்யலாம். இதன் மூலம் உங்களை நீங்களே சரியாக புரிந்து கொள்வதும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதும் எளிதில் வசப்படும்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment