Search

உங்கள் சிறுநீரை வைத்தே சர்க்கரை நோயை கண்டறியலாம்... எப்படி தெரியுமா..?

 வீட்டில் ஒரு நபருக்கேனும் சர்க்கரை நோய் உண்டு என்ற அளவுக்கு இன்று மிக பரவலாக பலரை பாதித்திருக்கக் கூடிய பிரச்சினை இது. உலகெங்கிலும் ஆண்டுதோறும் ஒன்றரை கோடி மக்கள் சர்க்கரை பாதிப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோயின் வரிசையில் இது 9ஆம் இடத்தில் இருக்கிறது என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு என்று வகைப்படுத்தப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலை தாக்கி, இன்சுலின் சுரப்பு என்பதை முற்றிலுமாக தடை செய்கிறபோது, டைப் 1 நீரிழிவு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவு தான்.

ஆனால், மிக பெரும்பாலானோரை பாதிப்பது டைப் 2 நீரிழிவு ஆகும். நமது கனையம் முறையாக செயல்படாமல் இருப்பதால் போதுமான இன்சுலின் சுரக்காமல் இருப்பது அல்லது இன்சுலின் உற்பத்தியை தடுப்பது போன்ற பாதிப்புகளால் இது உருவாகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய மிக பொதுவான அறிகுறி இதுவாகும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றபோது, அதனை வடிகட்டி கூடுதல் குளுகோஸ்களை உறிஞ்சும் பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்ளும். ஆனால், அதனை சிறுநீரகங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாதபோது சிறுநீர் வழியாக அதனை வெளித்தள்ளும். இதனால், நீடித்த தாகமும், அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும்.

ஆரோக்கியமான மனிதர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்..?

24 மணி நேர சுற்றில் ஒரு நபர் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் சுமார் 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். 10 முறை சிறுநீர் கழித்தாலும் ஒன்றும் பிரச்சினை கிடையாது. ஆனால், இதற்கு மேலும் சிறுநீர் கழிப்பது, அதிக தண்ணீர் அருந்துவது என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறி ஆகும்.

நீரிழிவு நோயாளி எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்.?

சராசரியாக 7 முதல் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் உள்ள சர்க்கரை நோயாளிகள் நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீரும், மிகுந்த பாதிப்பை கொண்டவர்கள் 20 லிட்டர் வரையிலும் தண்ணீர் அருந்த வாய்ப்பு உண்டு. வாய் வறட்சி காரணமாக இந்த நிலை ஏற்படும்.

மற்ற அறிகுறிகள்

அதிக முறை சிறுநீர் கழிப்பதுடன், கீழ்கண்ட பிரச்சினைகளும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

  • வாய் வறட்சி
  • மிகுந்த சோர்வு
  • பார்வையில் பிரச்சினை
  • திடீர் எடை இழப்பு
  • சாப்பிடுவது மற்றும் தூங்கும் முறைகளில் மாற்றம்

பரிசோதனை அவசியம்

ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாக சர்க்கரை நோய் பாதிப்பை கண்டறியலாம். ரத்தத்தில் ஹெபிஏ 1சி என்ற அளவை பரிசோதித்து பார்த்தால், 3 மாத சராசரி சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக சர்க்கரை நோய் தாக்கும் அபாயத்தை கண்டறியலாம்.

அபாயங்களை குறைப்பது எப்படி..?

ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் மூலமாக இதை தடுக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்தல், காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment