ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.. உடனே அப்ளை பண்ணுங்க! - Agri Info

Education News, Employment News in tamil

October 5, 2023

ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

 ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த ஆவின் ஜங்ஷன்கள் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐஸ்கிரீம் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அக்.2 அன்று விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.17. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9894204423, 784595109, 9629178789 என்ற ஆவின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment